கொரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்ட சோனியா... அருகில் வர அனுமதித்த நடிகை!

சென்னை : கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் நடிகர் நடிகைகள் பலரும் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் பொருட்டு தடுப்பூசிகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பல நடிகர் நடிகைகளை தொடர்ந்து நடிகை சோனியா அகர்வாலும் இப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து பிரபல நடிகை ஒருவர் இப்பொழுது நீங்கள் என் அருகில் வரலாம் என அனுமதி கொடுத்துள்ளார்.

ஃபேவரிட் ஹீரோயின்

ஃபேவரிட் ஹீரோயின்

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் முதல் படத்திலேயே இளசுகளை காதல் வலையில் விழ வைத்தவர். அட்டகாசமான நடிப்பு, பார்த்தவுடனேயே பிடித்து விடும் முகம் என ஃபேவரைட் ஹீரோயின் ஆக இன்று வரை உள்ளார் .

வெற்றிப் படங்களில்

வெற்றிப் படங்களில்

கோவில்,மதுர,7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு,புதுப்பேட்டை,வானம் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து பல விருதுகளை தட்டிச் சென்ற சோனியா அகர்வால் இப்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா மற்றும் காதலை தேடி நித்யா நந்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சட்டப்படி விவாகரத்து

சட்டப்படி விவாகரத்து

போலீஸ், அம்மா, அக்கா என குணச்சித்திர வேடங்களில் நடித்து இன்றும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் சோனியாஅகர்வால் இயக்குனர் செல்வராகவனின் முன்னால் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மனக்கசப்பு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன் பிறகு சோனியா அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

என் அருகில் வரலாம்

என் அருகில் வரலாம்

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளை தடுக்க தடுப்பூசிகள் வழங்குவது மிகத் தீவிரமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பலரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள தயங்கி கொண்டுள்ளனர் . இந்த தயக்கத்தை போக்கும் வகையில் நடிகர் நடிகைகள் பலர் முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர் அந்த வகையில் நடிகை சோனியா அகர்வால் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த ராதாவின் மகள் நடிகை கார்த்திகா நாயர் இப்பொழுது நீங்கள் என் அருகில் வரலாம் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X