Soniya Agarwal: அமானுஷ்யங்கள், திகிலூட்டும் 7G.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
சென்னை: சோனியா அகர்வால் நடித்துள்ள 7G திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. டிரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து எழுதி இயக்கி உள்ளார். திகிலூட்டும் திரைப்படமான இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கு, இதனால் அரண்மனை, காஞ்சனா படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று முதல் பாகம், இரண்டாம் பாகம் என பார்ட் பார்ட்டாக எடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த படத்தில் பேய் இருக்குமா என்றால் இருக்காது.. பேய் வரும் காட்சியில் எல்லாம் சிரிப்புத்தான். சிரிப்பு போலீஸ் மாதிரி, இது சிரிப்பு பேய் என்ற சொல்லலாம்.

7ஜி திரைப்படம்: கான்ஜுரிங் திரைப்படம் மாதிரி ஒரு பயங்கரமான திரைப்படத்தை பார்க்க ஆசைப்படும் பேய் பிரியர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 7ஜி திரைப்படம். பெயரைக் கேட்டது 7ஜி ரெயின்போ காலனி படம் போல காதல் கதை என்று நினைக்க வேண்டாம். அடுத்தடுத்து திருப்பம், அடுத்தடுத்து திகிலாக இருக்கும் ஒரு பேய் படம் தான் இந்த 7ஜி. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்டான நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது இப்படம் ஜூலை 5ந் தேதி உலகம் வெளியாக உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமானுஷ்யங்கள், திகில்: சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் படத்தின் நாயகி புதிதாக வீட்டை வாங்கி குடியேறுகிறார். அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை, பயமுறுத்தும் சில சம்பவங்களும் நடக்கின்றன. அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் கதாநாயகி, அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேடிச் செல்கிறார். இதில் பல எதிர்பாராத திருப்பங்கள், முடிச்சுகள் அவிழ்கின்றன. பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான ஹாரர் திரில்லராக இப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் ஹாருன்.
சோனியா அகர்வால்: இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்தது மட்டுமின்றி எழுதி, இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











