Sonia Agarwal: 7G ரெயின்போ காலனி நினைவுகளில் உருகிய சோனியா அகர்வால்... ஆனால்! செல்வராகவன்..?

சென்னை: செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போதுதான் செல்வராகவன், சோனியா அகர்வால் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ள சோனியா அகர்வால், செல்வராகவன் குறித்து எதுவும் குறிப்பிடாதது வைரலாகி வருகிறது.

 Sonia Aggarwal Melts Over 7G Rainbow Colony Movie Re-Release

உருகிய சோனியா அகர்வால்: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்தப் படத்தில் அவரது தம்பி தனுஷும் ஹீரோவாக இன்ட்ரோ ஆனார். இவர்கள் கூட்டணியில் துள்ளுவதோ இளமையை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களும் வெளியாகின. செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, தமிழில் வெளியான கிளாஸிக்கல் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த 7ஜி ரெயின்போ காலனி, 2004ம் ஆண்டு வெளியானது. யுவனின் பாடல்களுடன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் 7ஜி ரெயின்போ காலனி என்ற பெயரிலும், தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனியாகவும் இந்தப் படம் வெளியானது. இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இதிலும் ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், நாயகியாக சோனியா அகர்வால் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. செல்வராகவனும் சோனியா அகர்வாலும் காதலித்து 2006ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் நான்கே ஆண்டுகளில் இருவருமே விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

சோனியா அகர்வாலை பிரிந்த அடுத்த ஆண்டிலேயே கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். ஆனால், சோனியா அகர்வாலோ இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் தெலுங்கு வெர்ஷனான 7ஜி பிருந்தாவன் காலனி ரீ-ரிலீஸாகிறது. வரும் 22ம் தேதி 4கே குவாலிட்டியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Sonia Aggarwal Melts Over 7G Rainbow Colony Movie Re-Release

இதனை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள சோனியா அகர்வால், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் நினைவுகளையும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். "நான் நடித்ததில் ஆல்டைம் ஃபேவரைட் கல்ட் கிளாஸிக் திரைப்படமான 7ஜி பிருந்தாவன் காலனி, மீண்டும் திரையரங்குகளில் வெளியாவதில் மகிழ்ச்சி. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ஒவ்வொரு நினைவுகளும் இப்போதும் பசுமையாக உள்ளன" என பதிவிட்டுள்ளார்.

7ஜி ரெயின்போ காலனி படத்தையும் அதன் நினைவுகளையும் உருக்கமாக பதிவிட்டுள்ள சோனியா அகர்வால், செல்வராகவன் குறித்து எதுவும் எழுதவில்லை. சில தினங்களுக்கு முன்னர் கூட செல்வராகவன் குறித்து குற்றம்சாட்டியிருந்தார். அதாவது "இயக்குநர் செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர். கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். காதல் செத்துப்போன பின்னர் சினேகிதராக பார்க்க முடியாது. இனி என் வாழ்க்கையில் செல்வராகவன் முகத்தை பார்க்கவே மாட்டேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X