சோனியா அகர்வால் நடிக்கும் “கிராண்மா“… திகிலூட்டும் த்ரில்லர் மூவி !
சென்னை : நடிகை சோனியா அகர்வால் 'கிராண்மா' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
திகிலூட்டும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி உள்ளார்.
கிராண்மா படத்தில், விமலா ராமன் மற்றும் சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரமான பௌர்ணமி ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

அறிமுகம்
காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் சோனியா அகர்வால். முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிம்புவுடன் கோயிலில், விஜயுடன் மதுரா, 7 ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுபயலே என ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தார்.

விவாகரத்து பெற்றார்
பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த சோனியா அகர்வால். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கிராண்மா திகில் படம்
இந்நிலையில், நடிகை சோனியா அகர்வால் கிராண்மா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி உள்ளார். த்ரில்லர், திகில் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படம், கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வழக்கமான திகில் படம்போல இல்லாமல், ஹாலிவுட் பாணியில் திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் கூறினார்.

சோனியா லீட்ரோலில்
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில், சோனியா அகர்வால், ஆசிரியராக நடித்துள்ளார். விமலா ராமன் வழக்கறிஞராகவும், சார்மிளா பாட்டியாகவும், மலையாள நடிகர் ஹேமந்த் மேனன் வில்லனாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் அசோசியேட் யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு செல்லக்குட்டியே என்ற யூடியூப் பாடலின் மூலம் பிரபலமான ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











