அக்டோபரில் சோனியா டும் டும்
இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை ஒரு வழியாக வரும்அக்டோபர் மாதத்தில் கைப் பிடிக்கிறார். இத் தகவலை செல்வராகவனே தனதுவாயால் உறுதிப்படுத்தியுள்ளார்.
செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி, தனுஷின் நடிப்பில் வெளியாகிய படம்காதல் கொண்டேன். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தில் நாயகியாகநடித்த சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதனால் வெளி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களில் அதிகம் நடிப்பதை தவிர்க்கஆரம்பித்தார் சோனியா.
இதனால் சோனியாவின் திரை வாழ்க்கை படு மெதுவாக நிகரத் தொடங்கியது.அதேசமயம், செல்வாவுக்கும், சோனியாவுக்கும் இடையிலான காதல் படு வேகமாகவளரத் தொடங்கியது. இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினர்.
அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டும் பிரிந்தனர். மோதல் வரும்போதுபத்திரிக்கைகள் மூலமாக காதலை மறுப்பது பின்னர் மீண்டும் சேருவது என்று ஊடலும்கூடலுமாக ஓடிக் கொண்டுள்ளது இந்த காதல் எக்ஸ்பிரஸ் வண்டி.
இந் நிலையில் முடிந்தால் சீக்கிரத்தில் கல்யாணம் செய்து கொள்ளுமாறும்இல்லாவிட்டால் விட்டுவிடுமாறும் செல்வாவை நெருக்கத் தொடங்கினார் சோனியா.அந்த நெருக்குதலுக்கு தற்போது செல்வா மசிந்து விட்டார். கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளார்.
செல்வாவின் இயக்கத்தில் தனுஷ், ஸ்னேகா, சோனியா நடிப்பில் உருவாகியுள்ளபுதுப்பேட்டை படம் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. முதன் முறையாக முழுக்க முழுக்கடிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டுள்ள புதுப்பேட்டை படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியில்கலந்து கொள்ள சங்கம் தியேட்டருக்கு செல்வா, சோனியா, தனுஷ் ஆகியோர்வந்தனர்.
அப்போது செல்வாவிடம் கல்யாணம் எப்போது என்று கேட்டபோது, அக்டோபர்மாதம் நடைபெறும் என்றார். பொண்ணு சோனியாதானே என்று கன்ஃபார்ம் செய்துகொள்ளும் வகையில் நிருபர்கள் கேட்டபோது, ஆமாம் என்று சிரித்தும், சிரிக்காமலும்சொல்லிவிட்டுப் போனார் செல்வா.


Click it and Unblock the Notifications