Asha Bhosle: பாடகி ஆஷா போஸ்லேவின் பாதங்களுக்கு முத்தம் கொடுத்த சோனு நிகம்.. ட்ரெண்டாகும் போட்டோஸ்!

மும்பை: இந்தி திரையுலகின் மிகவும் புகழ் பெற்ற மற்றும் பழம் பெரும் பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. இவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீட்டு விழா நேற்று அதாவது ஜீன் மாதம் 28ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர், பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர் , சோனு நிகம் மற்றும் ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜானாய் போஸ்லே உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் கலந்து கொண்டது மட்டும் இல்லாமல் ஆஷ போஸ்லேவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

Asha Bhosle Sonu Nigam

இந்தி திரையுலகில் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகிலேயே மிகவும் புகழ் பெற்ற பாடகியாக விளங்கிய ஆஷா போக்லே தற்போது வயது முதிர்வு காரணமாக குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கின்றார். இவர் இந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள செண்பகமே செண்பகமே பாடலை பாடியது இவர்தான். அதேபோல் ஹேராம் படத்தின் தீம் பாடலாக உள்ள நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி பாடலைப் பாடியது இவர்தான். இவர் தனது வாழ்நாளில் பல்வேறு இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Asha Bhosle Sonu Nigam

இவர் கடந்த 1949ஆம் ஆண்டு தனது மேனேஜரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து மூன்றாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போது தனது கணவரின் தவறான நடவடிக்கைகளால் அவரைவிட்டுப் பிரிந்து தனது பெற்றோருடன் இணைந்து கொண்டார். இவர் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார். தனது மனதை உருக்கும் குரல் மூலம் பாடல்கள் பாடி வந்த ஆஷா போக்லே பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக 9 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 18 மகாராஸ்ட்ரா மாநில திரைப்பட விருதுகள், நான்கு பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் விருதுகளையும் வென்றுள்ளார்.

Asha Bhosle Sonu Nigam

பத்ம விபூஷன் விருது: இதுமட்டும் இல்லாமல் மகாராஸ்ட்ரா பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடிமகனுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதும் இவருக்கு 2000ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Asha Bhosle Sonu Nigam

வாழ்க்கை வரலாறு: கடந்த 1933ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியாவில் பிறந்த ஆஷா போக்லே தற்போது 90 வயதுகளில் உள்ள இந்தியாவின் மிக மூத்த குடிமக்களில் ஒருவராக இருப்பதுடன் இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்றாக உள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றினை கிட்டத்தட்ட 90 எழுத்தாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த புத்தகத்திற்கு "ஸ்வர்ஸ்வாமினி ஆஷா" என பெயரிட்டுள்ளனர். இந்த புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட்டார்.

Asha Bhosle Sonu Nigam

சொந்த வாழ்க்கை முதல் திரை வாழ்க்கை வரை: இந்த புத்தகத்தில் ஆஷா போக்லே தனது திரை வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என அனைத்தையும் ரசிகர்களுக்காக மனம் திறந்து கூறியுள்ளார் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதுமட்டும் இல்லாமல் தொடக்க காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் என எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.

Asha Bhosle Sonu Nigam

சோனு நிகம்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் சோனு நிகம், ஆஷா போக்லே அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று அவருக்கு முதலில் வணக்கம் செலுத்திவிட்டு, அவரது கால்களுக்கு அருகே அமர்ந்தார். அதன் பின்னர் அவரது கால்களுக்கு முத்தம் கொடுதார். அதன் பின்னர் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த ரோஜா பூவின் இதழ்கள் போடப்பட்ட தண்ணீரைக் கொண்டு ஆஷா போக்லேவின் பாதங்களைக் கழுவினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. சோனு நிகம்மின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Asha Bhosle Sonu Nigam

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X