twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்காலர்ஷிப்புடன் இலவச ஐஏஎஸ் கோச்சிங்...கலக்கும் சோனு சூட்

    |

    மும்பை : நெருக்கடியான கொரோனா பரவல், லாக்டவுன் காலங்களிலும் சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக இருந்து வருகிறார் நடிகர் சோனு சூட்.

    சினிமாக்களில் பலரும் வெறுக்கும் கொடூர வில்லனாக நடித்தாலும் உண்மையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்லவும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவி செய்து வருகிறார் சோனு சூட். இதனால் சோனு சூட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Sonu Sood Charity Foundation To Provide Free IAS Coaching Scholarships

    இந்நிலையில் சோனு சூட் நடத்தும் அறக்கட்டளை சார்பில் ஸ்காலர்ஷிப்புடன் இலவச ஐஏஎஸ் கோச்சிங்கும் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை சோனு சூட் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இதில் விண்ணப்பிப்பதற்காக நேரடி இணையதள லிங்க்கையும் அவர் கொடுத்துள்ளார்.

    யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள், நிதி நெருக்கடியால் படிப்பை தொடர முடியாமல் இருப்பவர்கள் இந்த லிங்க்கை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என சோனு சூட் குறிப்பிட்டுள்ளார்.

    ஐஏஎஸ் பயிற்சி அளிப்பதற்காக சம்பவம் (SAMBHAVAM) என்ற பெயரில் புதிய திட்டத்தை சோனு சூட்டின் அறக்கட்டளை துவங்கி உள்ளது. டெல்லியில் உள்ள Divine India Youth Association (DIYA) என்ற அமைப்புடன் இணைந்து சோனு சூட்டின் அறக்கட்டளை இந்த பயிற்சியை வழங்க உள்ளது.

    English summary
    Sony Sood Charity Foundation will provide free IAS Coaching Scholarships to the UPSC aspirants.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X