அவரையே அடிக்கிறியா... டிவியை சுக்கு நூறாக உடைத்த சிறுவன் !
ஆந்திரா : தெலங்கானா மாநிலத்தில் சோனு சூட் படத்தில் அடிவாங்குவதை டிவியில் பார்த்த சிறுவன் டிவியை சுக்கு நூறாக உடைத்தார்.
Recommended Video
இந்த தகவலை அறிந்த சோனுசூட், இதுபோன்று டிவியை உடைக்கக்கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சிறுவன் டிவியை உடைத்த சம்பவம் காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது

தயங்காது உதவி
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் சோனு சூட் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். உதவி என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு தயங்காது உதவி செய்து வருகிறார். இதனால் , சோனு சூட்டின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவுக்கு மக்கள் மனதில் அவர் உயர்ந்து விட்டார்.

7 வயது சிறுவன்
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குருவையா. இவரது மகன் விராட், 7வயது சிறுவனான இவன், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகராவார். இந்நிலையில், சிறுவன் விராட் சோனுசூட் நடித்த துக்குடு என்ற தெலுங்கு திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

டிவியை உடைத்த சிறுவன்
அந்த படத்தில் சோனு சூட் வில்லனாக நடித்திருப்பார். அவரை ஹீரோ மகேஷ் பாபு அடிப்பது போல் வந்த சண்டைக் காட்சி வந்தது. அதைப்பார்த்துக் கொண்டு இருந்த சிறுவன், திடீரென ஆக்ரோஷத்துடன் சோனு சூட்டையா அடிக்கிற என்று கூறிக்கொண்டே டிவியை அடித்து நொறுக்கி உள்ளார். சத்தம் கேட்டு ஓடி குடும்பத்தில் அவனை தடுத்து நிறுத்தி அது வெறும் படம் என்று கூறி சிறுவனை அமைதிபடுத்தினர்.

சிறுவனுக்கு அறிவுரை
இந்த தகவலை அறிந்த சோனுசூட், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்று டிவியை உடைக்கக்கூடாது, பிறகு உன் தந்தை என்னிடம் தான் டிவி வாங்கித்தரும்படி கூறுவார் என்று நகைச்சுவையாக பதிவிட்டு சிறுவனுக்கு அறிவுரை கூறியுள்ளார். சிறுவன் டிவியை உடைத்த சம்பவம் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











