twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு வருஷத்துக்கு அதை பண்ணித் தர முடியுமா? அப்படி கேட்ட இளைஞர்.. அசத்தல் பதில் சொன்ன சோனு சூட்!

    By
    |

    மும்பை: ரசிகர் ஒருவர் கேட்ட உதவிக்கு அசத்தலாகப் பதில் கூறி இருக்கிறார் நடிகர் சோனு சூட்.

    கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் நிலைகுலைந்தனர். வேலை விஷயமாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் அங்கு சிக்கிக்கொண்டனர்.

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், பிரபல நடிகர் சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த பணத்தைச் செலவழித்து தொடர்ந்து உதவி செய்து வந்தார்.

    மனிதாபிமான செயல்

    மனிதாபிமான செயல்

    விமானம் மூலமாகவும் பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர். இதனால், நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர்.

    தொடர்ந்து உதவி

    தொடர்ந்து உதவி

    சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். அவரை நிஜ ஹீரோ என்று கூறினர். சோனு சூட்டின், உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். வேலை இழந்தவர்களின் வேலை வாய்ப்புக்காக ஆப் ஒன்றையும் தொடங்கி உள்ளார். ஆந்திர விவசாயிக்கு டிராக்டர், கஷ்டப்படும் மாணவிக்கு செல்போன், மாட்டை விற்றவருக்கு மாடு என தொடர்ந்து உதவி செய்துவருகிறார்.

    அமேசான் பிரைம்

    அமேசான் பிரைம்

    அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பலர் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். சில சில்லறைத்தனமான உதவிகளையும் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு அதிரடியாகவும் கிண்டலாகவும் பதிலளித்து வருகிறார் சோனுசூட். இந்நிலையில் ஒரு நெட்டிசன், சகோதரா, அமேசான் பிரைமுக்கு ஒரு வருஷம் சப்ஸ்கிரைப் பண்ண முடியுமா? V படத்தைப் பார்க்க ஆர்வமா இருக்கேன். தயவு செய்து உதவ முடியுமா? என்று கேட்டுள்ளார்.

    கார் அனுப்ப முடியுமா?

    கார் அனுப்ப முடியுமா?

    இதற்கு கிண்டலாகப் பதில் அளித்துள்ள சோனு சூட், 'பிரதர் அதோட டெலிவிஷனும் சேர்த்து அனுப்பவா? கூடவே ஒரு ஏ.சி., கொஞ்சம் பாப்கான்..' என்று கூறியுள்ளார். இதற்கு முன்னும் சிலர் கிண்டலான உதவிகளை அவரிடம் கேட்டிருந்தனர். ஒருவர், என் மனைவியின் உறவினர்களை ராஜஸ்தான் போய் பார்க்கணும்.. ஒரு கார் அனுப்ப முடியுமா? என்று கேட்டிருந்தார். ஏன், நானே டிரைவ் பண்ணிட்டு போறேனே, என்ன மாடல் கார் வேணும்னு சொல்லுங்க என்று கூறியிருந்தார் கேலியாக.

    English summary
    Sonu Sood gives epic reply to Twitter user asking him to provide Amazon Prime subscription for a year
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X