twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்… சோனு சூட் மகிழ்ச்சி ட்விட்!

    |

    மும்பை : பாலிவுட் நடிகர் சோனு சூட்டு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

    இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டுள்ளார்.

    கையில் நாய்க்குட்டியுடன் குலுங்கி குலுங்கி ஓடி வரும் இலக்கியா.. திக்குமுக்காடும் இன்ஸ்டா! கையில் நாய்க்குட்டியுடன் குலுங்கி குலுங்கி ஓடி வரும் இலக்கியா.. திக்குமுக்காடும் இன்ஸ்டா!

    வாருங்கள் அனைவரும் இணைந்து பல உயிர்களை காப்பாற்றலாம் எனவும் கூறியுள்ளார்.

    கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கின் போது பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட் தனது மனிதநேயம் மிக்க செயல்களின் மூலம் மக்கள் மனதில் ஹீரோவாக உயர்ந்தார். ஊரடங்கின் போது மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தார்.

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானதை அடுத்து, கடந்த சனிக்கிழமை முதல் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    தற்போது அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் நெகடிவ் என்று வந்திருக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் சோனு சூட் பதிவிட்டுள்ளார். சுமார் 7 நாட்களுக்குப்பிறகு அவர் கொரோனாவிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

    பலரை காப்பாற்றலாம்

    பலரை காப்பாற்றலாம்

    சமூகவலைதளங்கள் வாயிலாக மக்கள் அவரிடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். அவரும் இந்த இக்கட்டான சூழலில் என்னால் உதவி செய்ய முடியாமல் போனது. எனவே நாம் அனைவரும் இணைந்து பல உயிர்களைக் காப்பாற்றலாம், அதேபோல் மருத்துவ உதவி கிடைக்காதவர்களுக்கும் நாம் உதவலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Sonu sood has recovered from Covid-19
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X