என் ஹஸ்பன்டை அம்மா வீட்டுக்கு அனுப்ப முடியுமா? என்னால முடியலைங்க..சோனு சூட்டிடம் உதவிகேட்ட பெண்!

By

சென்னை: தனது கணவரை அவர் அம்மா வீட்டுக்கு அனுப்ப முடியுமா? என்று கேட்ட பெண்ணுக்கு நடிகர் சோனு சூட் ஜாலியான பதிலளித்துள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay Effort, நிஜதிலும் வேலாயுதம் தான் | Real Hero Sonu Sood

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இருந்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.

ஓட்டல், உணவு

ஓட்டல், உணவு

இந்நிலையில் பிரபல நடிகர் சோனு சூட், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்திருந்தார். பின்னர் மும்பை மாநகராட்சியுடன் இணைந்து அந்தேரி, ஜோகேஸ்வரி, ஜூஹு, பாந்த்ரா பகுதியில் உள்ள 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்தார்.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

இந்நிலையில் கொரோனாவால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை, தனது சொந்த செலவில் பேருந்துகளை ஏற்பாடு செய்து, அனுப்பி வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்த இக்கட்டானச் சூழலில், ஏசி அறையில் அமர்ந்தபடி ட்வீட் போட்டுக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்பதால் களத்தில் இறங்கினேன் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து உதவி

தொடர்ந்து உதவி

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அவரை சூப்பர்மேனாக சித்திரித்தும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு மறுக்காமல் உதவி வருகிறார்.

வித்தியாச உதவி

வித்தியாச உதவி

இதற்கிடையே, விவகாரமான உதவிகளையும் அவரிடம் சிலர் கேட்டுவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஒருவர் மதுக்கடைக்குப் போக உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். இன்னொருவர் பீகாரில் உள்ள தனது காதலியை பார்க்க உதவுமாறு கேட்டிருந்தார். இப்போது ட்விட்டரில், சுஷ்ரிமா ஆச்சார்யா என்ற பெண் வித்தியாசமான உதவியை கேட்டுள்ளார்.

உங்களால் முடியுமா?

உங்களால் முடியுமா?

அதாவது, 'லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து எனது கணவருடன் வசித்து வருகிறேன். என்னை என் அம்மா வீட்டுக்கோ, அல்லது அவரை அவர் அம்மா வீட்டுக்கோ உங்களால் அனுப்ப முடியுமா? என்னால் இனி அவருடன் ஒன்றாக இருக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

கோவா அனுப்புகிறேன்

கோவா அனுப்புகிறேன்

இதையடுத்து இதற்கு ஜாலியாகப் பதிலளித்துள்ள நடிகர் சோனு சூட், 'என்னிடம் சிறப்பான திட்டம் இருக்கிறது. உங்கள் இருவரையும் கோவாவுக்கு அனுப்பி விடுகிறேன். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. தமிழ் தவிர இந்தி மற்றும் தெலுங்கில் நடித்துவரும் சோனு சூட், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X