twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனால் வேலையை இழந்தவர்களுக்குத் தகுதியான வேலை.. 'கொரோனா ஹீரோ' சோனு சூட் அடுத்த அதிரடி!

    By
    |

    மும்பை: கொரோனா காரணமாக வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக புதிய செயலியை நடிகர் சோனு சூட் உருவாக்கி உள்ளார்.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் திடீரென லாக்டவுனை பிறப்பித்தன.

    யாரும் எதிர்பார்க்காத இந்த லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டனர்.

    திடீர் போஸ்ட்டால் பரபரப்பு.. இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறாரா பிரபல முன்னாள் ஹீரோயின்..? திடீர் போஸ்ட்டால் பரபரப்பு.. இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறாரா பிரபல முன்னாள் ஹீரோயின்..?

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், பிரபல நடிகர் சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த பணத்தைச் செலவழித்து தொடர்ந்து உதவி செய்து வந்தார். விமானம் மூலமாகவும் பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    மனிதாபிமான செயல்

    மனிதாபிமான செயல்

    கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர். தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவும் கொடுத்து வந்தார். இதனால், நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர்.

    தயாராக இருக்கிறோம்

    தயாராக இருக்கிறோம்

    அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்றும் கூறினர். சோனு சூட்டின், உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட 2 ஆயிரம் பேரை உத்தராகண்டுக்கும் 2 ஆயிரத்து நானூறு பேரை பீகாருக்கும் அனுப்பி வைத்தார். 'லாக்டவுன் முடிந்தபின் மும்பை திரும்ப நினைப்பவர்களுக்கும் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்' என்றும் தெரிவித்திருந்தார்.

    பிரவாசி ரோஜ்கர்

    பிரவாசி ரோஜ்கர்

    இப்போது கிரிகிஸ்தானில் தவித்து வரும் மாணவர்களை தனது சொந்த செலவில் விமானம் மூலம் மீட்டுள்ளார். இந்த விமானம் இன்று இந்தியா வர இருக்கிறது. இதற்கிடையே, கொரோனா காரணமாக வேலை இழந்தவர்களுக்காக, பிரவாசி ரோஜ்கர் என்ற செயலியை தொடங்கி உள்ளார். இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை பெற்று தர அவர் முயன்று வருகிறார்.

    Recommended Video

    Thalapathy Vijay Effort, நிஜதிலும் வேலாயுதம் தான் | Real Hero Sonu Sood
    வேலை வாய்ப்புகள்

    வேலை வாய்ப்புகள்

    இதற்காக பல தன்னார்வ நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் அவருக்கு உதவுகின்றன. 'கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்தவர்கள், இந்தச் செயலியில் தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்று சோனு சூட் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Actor Sonu Sood on Wednesday launched an app to offer support to workers in finding right job opportunities in various sectors across the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X