twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டவிரோத கட்டிட விவகாரம்.. உச்ச நீதிமன்றத்தில் பிரபல நடிகர் சோனு சூட் மனு தாக்கல்!

    By
    |

    மும்பை: சட்டவிரோத கட்டிடத்தை இடிக்கத் தடை கோரி நடிகர் சோனு சூட் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

    கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் சோனு சூட்.

    பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

    ரியல் ஹீரோ

    ரியல் ஹீரோ

    இதையடுத்து அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்தாலும் நீங்கள்தான் ரியல் ஹீரோ என்றும் கொரோனா கால ஹீரோ என்றும் உங்கள் மனது பெரிது என்றும் கூறுகின்றனர். இதற்கிடையே, வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார்.

    தெலங்கானாவில்

    தெலங்கானாவில்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் உதவிகள் செய்தும் வருகிறார். அவருக்கான பாராட்டு மழை தொடர்கிறது. அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் உதவிகளைப் பாராட்டி தெலங்கானாவில் அவருக்குக் கோயில் கட்டியுள்ளனர்

    அனுமதி பெறாமல்

    அனுமதி பெறாமல்

    இந்நிலையில் நடிகர் சோனு சூட், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    இதை எதிர்த்து மும்பை சிவில் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜுஹு போலீசில் மாநகராட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சோனு சூட் உரிய அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி குடியிருப்பு கட்டிடத்தை, ஓட்டலாக மாற்றியிருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.

    மனுதாக்கல்

    மனுதாக்கல்

    இதற்கிடையே தான் எந்தவித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், குடியிருப்புக் கட்டடத்தை வர்த்தகப் பயன்பாட்டுக் கட்டடமாக மாற்றுவதற்காக மகாராஷ்டிர கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் மட்டுமே இன்னும் அனுமதி பெற வேண்டியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    உயர் நீதிமன்றம்

    உயர் நீதிமன்றம்

    பின்னர் மும்பை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி, சோனுசூட் மனுவை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மாநகராட்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சோனு சூட் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

    English summary
    Sonu Sood moves SC against HC order on illegal construction notice.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X