அதுக்குலாம் மனசு வேணும்.. கொரோனா வாரியர்ஸுக்கு ஓட்டல் கொடுத்த வில்லன்.. இப்போ செய்ற உதவிய பாருங்க!

By

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுக்க தனது ஓட்டலை ஒதுக்கிய வில்லன் நடிகர், இப்போது தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

Recommended Video

Pandian stores Kathir Huge help | Raghava Lawrence emotional Tweet

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் ஏராளமானார் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா இந்த வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு இந்த வைரஸால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில், மும்பையில் உள்ள தனது நான்கு மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார், பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான்.

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் மையமாக மாற்றி அமைக்க, பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன் அவர் அறிவித்தார். இதையடுத்து, பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு தனது ஓட்டலை வழங்கினார்.

உதவுவது பெருமை

உதவுவது பெருமை

இதுபற்றி சோனு சூட் கூறும்போது, மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு... அந்த கொரோனா வாரியர்ஸுக்கு என்னால் ஆன உதவியை செய்வது பெருமை' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தினமும் 45 ஆயிரம் பேருக்கு அவர் உணவு கொடுத்து வருகிறார்.

சக்தி அன்னதானம்

சக்தி அன்னதானம்

மும்பை மாநகராட்சியுடன் இணைந்து அந்தேரி, ஜோகேஸ்வரி, ஜூஹு, பாந்த்ரா பகுதியில் உள்ளவர்களுக்கு இந்த உணவை வழங்குகிறார். 'இந்த இக்கட்டான சூழலில் நமக்கு உணவும் வீடும் இருக்கிறது. ஆனால், தினமும் பலர் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு என் அப்பாவின் பெயரில் 'சக்தி அன்னதானம்' என்று வழங்கி வருகிறேன். என்னால் பலருக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் சோனு சூட். இதையடுத்து அவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

அருந்ததி வில்லன்

அருந்ததி வில்லன்

நடிகர் சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அருந்ததி படத்தில் இவரது வில்லன் நடிப்பு பேசப்பட்டது. இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X