நான் பிரதமரா....ஆள விடுங்கப்பா...சோனு சூட் அளித்த அசத்தல் பதில்

மும்பை : சினிமாவில் கொடூரமான வில்லனாக தோன்றினாலும், நிஜத்தில் தங்க மனசு கொண்ட ரியல் ஹீரோவாக உலா வருகிறார் சோனு சூட். கொரோனா நோய் தொற்று துவங்கியது முதல் நாட்டில் பலருக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, மருத்துவ உதவி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்வது என பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் சோனு சூட். இதனால் சமூக வலைதளங்களில் இவரை பலரும் கொண்டாடி வருகின்றனர். பத்திரிக்கைகளிலும், மீடியாக்களிலும் இவரை பற்றிய செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா பாதிப்பிலும் உதவிக்கரம்

கொரோனா பாதிப்பிலும் உதவிக்கரம்

சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமையில் இருந்து வந்தார் சோனு சூட். அந்த நிலையிலும் தன்னிடம் மருத்துவ உதவி கேட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் வழியாக உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தார். நேற்று, பிரான்சில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

சோனு சூட் பிரதமராகனும்

சோனு சூட் பிரதமராகனும்

இதனால் பலரும் சோனு சூட் பிரதமரானால் நாடு, கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டு, நல்ல நிலைக்கு திரும்பும் என பலரும் கூறி வருகின்றனர். நடிகை ராக்கி சராவத் மற்றம் காமெடியன் வீர் தாஸ் போன்றோரும் இதை வலியுறுத்தி வருகின்றனர். ட்விட்டர் பலனாளர் ஒருவர் 2024 ல் வீர்தாஸ் பிரதமராக வேண்டும் என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வீர்தாஸ், ராங் நம்பர். சோனு சூட்டிற்கு கால் பண்ணுங்க என பதிவிட்டார்.

சபாஷ் போட வைத்த பதில்

சபாஷ் போட வைத்த பதில்

இதே கோரிக்கையை பலரும் தங்கள் கமெண்டில் பதிவிட்டனர். சிலர் சோனு சூட் வீட்டிற்கே சென்று இது போன்ற கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்து கவனித்த சோனு சூட், நான் சாதாரண மனிதனராக இருப்பதே நல்லது என்றார். அப்படியும் விடாமல் சிலர் நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிட கூடாது என கேட்டனர்.

அது என் வேலையில்லை

அது என் வேலையில்லை

அதற்கு பதிலளித்த சோனு சூட், எனது சகோதரர்கள் தேர்தலில் போட்டியிடும் போது நான் அங்கு என்ன செய்ய போகிறேன். அது எனது வேலையும் இல்லை என அசத்தலான ஒரு பதிலை கூறி உள்ளார். சோனு சூட் தற்போது இந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X