கடவுள் போல நினைக்கும் மக்கள்.. சூப்பர்மேன் சோனு சூட் உதவுங்கள் என ஒருநாளைக்கு இத்தனை மெசேஜ் வருதாம்
மும்பை: நடிகர் சோனு சூட் தனக்கு ஒரு நாளைக்கு எத்தனை 'ஹெல்ப்' மெசேஜ்கள் வருகின்றன என்ற தகவலை பகிர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
Recommended Video
இதில், தன்னால் முடிந்தவர்களுக்கு தான் உதவி வருவதையும், உதவ முடியாமல் போகும் நபர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பையும் கேட்டுள்ளார் இந்த பரந்த மனசுக்காரர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதில் தொடங்கிய இந்த சேவை பயணம், ஏகப்பட்ட பரிமாணங்களில் தற்போது தொடர்ந்து கொண்டே செல்வது பாராட்டுதலுக்குரியது.

சூப்பர்மேன் சோனு சூட்
மெசய்யா என்றும் சூப்பர்மேன் சோனு சூட் என்றும் மக்கள் இவரை ஒண்ணும் சும்மா பேருக்கு போற்றவில்லைங்க, அந்த அளவுக்கு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை தனியாளாய் நின்று செய்து காட்டி அசத்தி வருகிறார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என பாடிய வள்ளலாரை போல மாறி கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

கடவுள் போல நினைக்கும் மக்கள்
வறுமையில் வாடும் நபர்கள், இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் நபர்கள் என பலரும் இவரை கடவுள் போல நினைத்து, தங்களின் துயர் துடைப்பார் என நம்ப ஆரம்பித்து விட்டனர். அதன் விளைவாக தினம் தோறும் இவருக்கு ஆயிரக்கணக்கான உதவி கோரிக்கை வருவதை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் சோனு சூட்.

ஒரு நாளைக்கு இவ்வளவா?
தினமும் தனக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் ‘HELP' மெசேஜ்களின் பட்டியலை நடிகர் சோனு சூட் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். "1137 மெயில்கள், 19000 ஃபேஸ்புக் மெசேஜ்கள், 4812 இன்ஸ்டாகிராம் மெசேஜ்கள், 6741 ட்விட்டர் மெசேஜ்கள்" வருகிறதாம்.

மன்னித்து விடுங்கள்
சாதாரண மனிதனால், இத்தனை பேருக்கும் ஒரே நாளில் உதவி செய்வது என்பது முடியாத காரியம் என்றும், ஆனாலும், தன்னால் இயன்ற வரை தன்னை நாடி உதவி என கேட்கும் நபர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதில் பலருக்கு தன்னால் உதவ முடியாததற்கு மன்னித்து விடுங்கள் என்றும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு தனது பரந்த மனசை வெளிக்காட்டி உள்ளார்.

வெளியே வாங்க
சமீபத்தில், இதுதொடர்பாக ஒரு ட்வீட்டையும் நடிகர் சோனு சூட் பதிவிட்டு இருந்தார். பணம் படைத்த மற்ற பிரபலங்களும் தங்களது கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இருந்தார். ஒரு பிரபலம் ஒரு நோயாளியை பேணிக் காத்தாலே நம் நாட்டில் பாதி கஷ்டம் முடிந்து விடும் என்று கூறியிருந்தார். மற்றவர்களும் செவி மடுத்தால் நன்றாக இருக்கும். சோனு சூட்டின் இந்த சேவை மேலும் தொடரட்டும்.


Click it and Unblock the Notifications











