உங்க நரம்பு எஃகுல இருந்தா மட்டும் பாலிவுட்டுக்கு வாங்க..'அவுட்சைடர்'களுக்கு பிரபல நடிகர் அட்வைஸ்

By

மும்பை: உங்கள் நரம்புகள் எஃகில் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாலிவுட்டுக்கு வாருங்கள் என்று அவுட்சைடர்களுக்கு பிரபல நடிகர் அட்வைஸ் செய்துள்ளார்.

Recommended Video

Sonu Sood Gifts Tractor to a Farmer Family

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு நெபோடிசம் பற்றிய பேச்சு பாலிவுட்டில் தலைதூக்கி இருக்கிறது.

அதாவது வாரிசு நடிகர்கள், வாரிசு நடிகர், நடிகைகள் இல்லாத அவுட்சைடர்கள் பற்றி காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

வாரிசு நடிகர், நடிகைகள்

வாரிசு நடிகர், நடிகைகள்

திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைதளங்களுக்கே சென்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து, அவர்களை கடுமையாக விளாசினர். இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

எஃகு நரம்புகள்

எஃகு நரம்புகள்

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி பாலிவுட் பிரபலங்கள் நெபோடிசம் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது காலங்காலமாக சினிமாவில் நடந்து வருவதுதான் என்றும் இதுபற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், உங்கள் நரம்புகள் எஃகில் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பாலிவுட்டுக்கு வாருங்கள் என்று 'அவுட்சைடர்'களுக்கு பிரபல நடிகர் சோனு சூட் அட்வைஸ் செய்துள்ளார்.

விமானங்கள்

விமானங்கள்

இவர் லாக்டவுனுக்குப் பிறகு பல்வேறு பகுதிகளில் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தனது செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தவர். சிலரை தனி விமானங்கள் மூலமாகவும் ரயில் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை ஹீரோ என்று பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நெபோடிசம் பற்றி நடிகர் சோனு சூட் கூறியிருப்பதாவது:

எப்போதும் அவுட்சைடர்

எப்போதும் அவுட்சைடர்

தினமும் ஏராளமானவர்கள் பெரும் கனவுகளோடு வருகிறார்கள். அதில் பெரிய இடத்தை பெறுபவர்கள் குறைவு. அது தொடர்பான அழுத்தங்கள் உண்மையானது. அவுட்சைடர் எப்போதும் அவுட்சைடராகவே இருப்பார். ஒரு அவுட்சைடர் இங்கு வந்து முன்னேறினால், அது பல அவுட்சைடர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு நகரத்துக்கு வந்தபோது எனக்கான மரியாதை வேறு மாதிரி இருக்கும் என்று நினைத்தேன்.

எஃகு நரம்புகள்

எஃகு நரம்புகள்

ஆனால் அப்படி நடக்கவில்லை. முதல் 6, 8 மாதங்கள் எனது பயணம் கடினமானதாக இருந்தது. சினிமாவுக்கு வரும் அவுட்சைடர்களுக்கு நான் சொல்வது, உங்களிடம் எஃகு நரம்புகள் இருந்தால் மட்டும் வாருங்கள். அதிசயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். தனது உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கிறோம், பார்த்ததுமே சினிமா கம்பெனிக்கு அழைத்துச் சென்று அடுத்த படத்தில் வாய்ப்புகள் தந்துவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்.

எளிதாக இருக்கலாம்

எளிதாக இருக்கலாம்

சினிமா நடிகர், நடிகைகள் வாரிசுகள் என்றால், அவர்களுக்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். நடிகரின் அப்பா, போனில் இயக்குனரிடமோ, தயாரிப்பாளரிடமோ பேசினால் உடனே கிடைக்கும். நாளை, என் குழந்தைகள் சினிமா இன்டஸ்ட்ரிக்கு வரவேண்டும் என்று விரும்பினால், அது அவர்களுக்கு எளிதாக இருக்கலாம். இவ்வாறு நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X