சோனு சூட்டின் மகத்தான மக்கள் சேவை... கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் !

ஆந்திரா : சோனு சூட்டின் ரசிகர்கள் அவரது கட் -அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சோனு சூட் கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகிறார்.

உதவி என்று தன்னை யார் தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு தானாக முன்வந்து தயக்காது உதவி செய்துவருகிறார். இதனால் இவருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன.

அதிகரிக்கும் பாதிப்பு

அதிகரிக்கும் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு லட்சங்களில் ஏற்பட்டு வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எகிறிக்கொண்டே செல்கிறது. இதனால், சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பித்துள்ளது.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்ஸிஜன் கேட்டு அவலக் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் சிலிண்டர்

கொரோனா முதல் அலையின் போதே வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். தற்போதும்அந்த சேவையை தொடர்ந்து வருகிறார். மருத்துவ உதவி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்வது என பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் சோனுசூட்.

சோனு சூட் பவுன்டேஷன்

சோனு சூட் பவுன்டேஷன்

நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு சோனு சூட் பவுன்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்புக்கு மக்கள், பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலர் தங்களால் முடிந்த பண உதவி செய்து வருகின்றார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் இவரை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

பால் அபிஷேகம்

பால் அபிஷேகம்

இந்நிலையில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தின் ஸ்ரீகலஹஸ்தியில் ரசிகர்கள் சிலர் சோனு சூட் கட் -அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்துள்ளார்கள் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X