ரீலில் வில்லன்...ரியலில் ஹீரோ...விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய சோனு சூத்..குவியும் பாராட்டுக்கள்
மொகாலி : விபத்தில் காயமடைந்தவரை தூக்கி சென்று உதவிய நடிகர் சோனு சூத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவரின் மனிதநேயத்தை பாராட்டி வருகின்றனர்.
பல படங்களில் கொடூரமான வில்லன் ரோலில் நடித்துள்ளார் சோனு சூத். தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி வில்லன்களில் ஒருவராக இருக்கும் சோனு சூத் நிஜ வாழ்க்கையில் பலருக்கும் ஏராளமான உதவிகள் செய்து, ரியல் ஹீரோ என பலராலும் புகழப்பட்டு வருகிறார். அப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

பஞ்சாப் இரவு நேர விபத்து
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் கோட்காபுரா பைபாசில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அந்த வழியாக நடிகர் சோனு சூத் காரில் கடந்து சென்றுள்ளார்.

ஓடி சென்று உதவிய சோனு சூத்
சாலையோரத்தில் விபத்தில் காயமடைந்தவரை பார்த்த சோனு சூத், ஓடிச் சென்று அந்த நபரை தனது கைகளாலேயே தூக்கி சென்று, தனது காரில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த காட்சியை அங்கு இருந்த ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகமானவர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த பலரும் சோனு சூத்தின் மனிதநேயத்தை பாராட்டி வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக உதவும் சோனு
சோனு சூத் உதவி செய்வது புதியதல்ல. பாலிவுட்டில் மற்றவர்களுக்கு உதவுபவர்களில் சோனு சூத்தும் ஒருவர். இவர் சமீபத்தில் ஏராளமான பெண் குழந்தைகளுக்கு சைக்கிளை நன்கொடையாக அளித்துள்ளார். பல மாநிலங்களில் குழந்தைகளுக்கு கல்வி கற்கவும் உதவி செய்துள்ளார். 2020 ம் ஆண்டு நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருந்த போதும், கிட்டதட்ட ஒரு லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரயில், பஸ்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூத்.
Recommended Video

இவ்வளவு செய்திருக்காரா
கொரோனா இரண்டாம் அலையின் போதும் பஞ்சாப், பீகார், உத்திர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் , ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் 18 ஆக்சிஜன் பிளான்ட்களை அமைத்து, பலருக்கும் உதவி உள்ளார் சோனு சூத். கிட்டதட்ட 5500 க்கும் அதிகமான படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் சோனு சூத்.


Click it and Unblock the Notifications











