twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா கொடுத்த தமிழ் கற்பது எப்படி? என்ற புக்.. அந்த நாளை மறக்கவே முடியாது.. புல்லரிக்கும் சோனு சூட்!

    By
    |

    சென்னை: முதல் வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைத்ததும் 'தமிழ் கற்பது எப்படி?' என்ற புத்தகத்தை தனது அம்மா வாங்கிக் கொடுத்ததாகக் கூறி உள்ளார் நடிகர் சோனு சூட்.

    Recommended Video

    Sonu Sood helped Tamil students | Oneindia Tamil

    கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் நடிகர் சோனு சூட்.

    தனது சொந்த பணத்தில் பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

    இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாதிரி இருக்கு.. பிக்பாஸ் நடிகையை வச்சு செய்த நெட்டிசன்ஸ்!இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாதிரி இருக்கு.. பிக்பாஸ் நடிகையை வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

    விஜயகாந்தின் கள்ளழகர்

    விஜயகாந்தின் கள்ளழகர்

    இதன் மூலம் சமூக வலைதளங்களில் அவரை ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர். அவர் தொடர்ந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி வருகிறார். நடிகர் சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அருந்ததி படத்தில் இவரது வில்லன் நடிப்பு பேசப்பட்டது.

    பல்வேறு ஆடிஷன்

    பல்வேறு ஆடிஷன்

    இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நேகா துபியா டிவி நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். அவருக்கு அளித்த பேட்டியில் சோனு சூட் கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் இந்தி படங்களுக்கான பல்வேறு ஆடிஷன்களில் கலந்துகொண்டேன். சிறப்பாக செய்திருக்கிறேன், கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவேன். ஆனால் கிடைக்காது.

    தமிழ் கற்பது எப்படி

    தமிழ் கற்பது எப்படி

    ஆனால், தமிழ் சினிமாவில் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது. உடனே என் அம்மா, தமிழ் கற்பது எப்படி? என்ற புத்தகத்தை எனக்காக வாங்கிக் கொடுத்தார். அதில் இருந்து சிலவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டேன். அந்த நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. நான் சென்னையில் அந்தப் படத்தின் ஆடிஷனுக்கு நம்பிக்கையுடன் சென்றேன்.

    சட்டையை கழற்றி

    சட்டையை கழற்றி

    உதவி இயக்குனர் ஒருவர் சவுகரியமாக என்னை அமரவைத்தார். அப்போதே ஒரு நடிகரான உணர்ந்துகொண்டேன். படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் என்னருகில் வந்து உடலை காட்டச் சொன்னார்கள். நான் சட்டையை கழற்றி சில போஸ்கள் கொடுத்தேன். இது போதும், நீங்கள் படத்தில் இருக்கிறீர்கள் என்றார்கள். நான் மீண்டும் உறுதி செய்தேன். படத்தில் இருக்கிறேனா? என்று. அவர்கள் நிச்சயமாக என்றனர்.

    மறக்க முடியாது

    மறக்க முடியாது

    அப்போது என்னிடம் பேஜர் இருந்தது. பிறகு எஸ்டிடி பூத்துக்கு சென்று எனக்கு வேண்டியவர்களிடம், தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறேன் என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னேன். அந்த நாளை ஒரு போதும் மறக்க முடியாது. அன்று சென்னையில் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது. என் சினிமா பயணம் அன்று தொடங்கியது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ள்ளார் சோனுசூட்.

    English summary
    Sonu sood says, 'when I got my first South film, my mom gave me a book 'how to learn Tamil'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X