twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வள்ளல்தாங்க, தொடர்ந்து அசத்தறாரே.. படக்குழுவுக்கு 100 ஸ்மார்ட்போன்கள் கொடுத்த நடிகர் சோனு சூட்!

    By
    |

    சென்னை: நூறு ஸ்மார்ட்போன்களை இலவசமாக, தான் நடிக்கும் படக்குழுவினருக்கு கொடுத்திருக்கிறார், பிரபல நடிகர் சோனு சூட்.

    பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இவர் தமிழில் கள்ளழகர் படம் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

    தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார்.

    சிக்கிக் கொண்டனர்

    சிக்கிக் கொண்டனர்

    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவர், கொரோனா காலகட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தார். அதாவது, கொரோனாவுக்காக கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர்.

    உதவி செய்தார்

    உதவி செய்தார்

    ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த பணத்தைச் செலவழித்து உதவி செய்து வந்தார்.

    மனிதாபிமான செயல்

    மனிதாபிமான செயல்

    கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்தார். அவருடைய மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்றும் கூறினர்.

    உதவித்தொகை

    உதவித்தொகை

    அவர் இப்போதும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் உதவிகளைப் பாராட்டி தெலங்கானாவில் அவருக்குக் கோயில் கட்டியுள்ளனர்.

    சிரஞ்சீவி தயக்கம்

    சிரஞ்சீவி தயக்கம்

    இந்நிலையில் தனக்கு ஹீரோ வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார். அதோடு, தெலுங்கில் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறேன். வில்லன் வேடம்தான். ஆக்‌ஷன் காட்சிகளில் என்னை அடிப்பதுபோல நடிக்க, நடிகர் சிரஞ்சீவி தயங்கினார் என்றும் கூறியிருந்தார்.

    100 ஸ்மார்ட்போன்கள்

    100 ஸ்மார்ட்போன்கள்

    இந்நிலையில், 'ஆச்சார்யா' படத்தில் பணியாற்றும் பலர் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் தொழிலாளர்கள் என்பதும் அவர்கள் குழந்தைகளின் கல்விக்காக, ஸ்மார்ட்போன் வாங்க வசதியில்லாமல் இருப்பதும் சோனு சூட்டுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து படக்குழுவில் இருந்த சுமார் 100 தொழிலாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    English summary
    Actor Sonu Sood gifted 100 smartphones to all the ground-level crew who worked for his upcoming Telugu film 'Acharya'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X