twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரான்சிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் சோனு சூட்

    |

    மும்பை : அதிகரித்து வரும் கொரோனா சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய நடிகர் சோனு சூட் முடிவு செய்துள்ளார்.

    இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளாக நிறுவவும் சோனு சூட் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியாவில் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும் சோனு சூட் இறங்கி உள்ளார்.

    Sonu Sood to import oxygen plants from France

    கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க இந்த இறக்குமதியை அவர் செய்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறைந்த பட்சம் 4 மாநிலங்களிலாவது இந்த ஆலையை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு இவை அவசியம்.

    இது பற்றி சோனு சூட் கூறுகையில், ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஒட்டுமொத்த மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்ய மட்டுமல்ல, ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பி வைக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் இதை சரி செய்யும் தீர்வாக அமையும் என்றார்.

    முதல் ஆலையை மே 20 ம் தேதிக்கும் முன் நிறுவவும் சோனு சூட் திட்டமிட்டுள்ளார். சோனு சூட்டின் இந்த செயலால் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம் என நம்பப்படுகிறது. ஏற்கனவே தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த போதிலும் சமூக வலைதளங்கள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மருத்துவ உதவிகளை செய்தவர் சோனு சூட்.

    English summary
    Sonu Sood has decided to import oxygen plants from France and other countries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X