twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த நேரத்தின் தேவை இதுதான்.. ஆந்திர அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்கும் சோனு சூட்!

    |

    நெல்லூர்: ஆந்திராவின் நெல்லூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பிளான்ட்டை உருவாக்க உள்ளார் நடிகர் சோனு சூட்.

    கொரோனா வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியதும், மக்களுக்காக சேவை செய்யும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் சோனு சூட்.

    லாக்டவுனால் தவிப்பு.. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய மூத்த நடிகை.. குவியும் பாராட்டு!லாக்டவுனால் தவிப்பு.. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய மூத்த நடிகை.. குவியும் பாராட்டு!

    இவரைப் போல ஒரு நடிகர் நம்ம ஊரில் இல்லையே என நாடு முழுவதும் மக்கள் ஏங்கும் அளவுக்கு தொடர்ந்து தனது மக்கள் சேவையை செய்து வருகிறார்.

    தனி ராஜாங்கம்

    தனி ராஜாங்கம்

    சோனு சூட் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு லாக்டவுனால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை கடந்த ஆண்டு தொடங்கினார். தற்போது சோனு சூட் பவுண்டேஷன் மூலம் வரும் அனைத்து நிதியையும் சரியான முறையில் ஒரு பெரிய டீமையே வைத்துக் கொண்டு பலருக்கும் உதவி வருகிறார்.

    உதவி கேட்கும் பிரபலங்கள்

    உதவி கேட்கும் பிரபலங்கள்

    சாதாரண மக்கள் முதல் கிரிக்கெட் வீரர் ரெய்னா உள்பட ஏகப்பட்ட பிரபலங்களே நடிகர் சோனு சூட்டுவிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை உதவிகளையும் மற்ற உதவிகளையும் கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளார் சோனு சூட்.

    ஆக்ஸிஜன் பிளான்ட்

    ஆக்ஸிஜன் பிளான்ட்

    மும்பை, கர்நாடகாவை தொடர்ந்து தற்போது ஆந்திர மக்களுக்கும் தனது உதவியை செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் பிளான்ட் ஒன்றை தனது அறக்கட்டளை சார்பாக நிறுவ உள்ளார் சோனு சூட்.

    இரண்டு இடங்களில்

    இரண்டு இடங்களில்

    மேலும், கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் பிளான்ட்டை நிறுவ உள்ளார். ஆக்ஸிஜன் கிடைக்காமலே நிறைய நோயாளிகள் கொரோனாவுக்கு பலியாகி வரும் நிலையில், ஆக்ஸிஜன் பிளான்ட்டுகளை மேலும், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த இரு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பிளான்ட் செயல்பட துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த நேரத்தின் தேவை

    இந்த நேரத்தின் தேவை

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சோனு சூட், இந்த நேரத்தின் முதல் தேவை இது மட்டும் தான் எனக் கூறியுள்ளார். மக்களை காப்பாற்றும் முயற்சியில் பல திரை பிரபலங்களும் பணம் படைத்தவர்களும் ஈடுபட வேண்டும் என முன்னதாக ஓப்பன் அழைப்பு விடுத்திருந்தார் சோனு சூட். சமீபத்தில் நடிகை சாரா அலி கான் சோனு சூட்டின் அறக்கட்டளைக்கு நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Super Human Sonu Sood to set up oxygen plants in Andhra Pradesh Nellore and Kurnool hospitals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X