அடேங்கப்பா.. நானா இப்படி.. AI மேஜிக்கை பார்த்து ஆடிப்போன சோனு சூட்.. வேறலெவல் ஃபினிஷிங்!

மும்பை: ரீல் லைஃப்பில் வில்லனாக நடித்து வந்தாலும் ரியல் லைஃப்பில் மனிதக் கடவுளாகவே வாழ்ந்து மக்களின் குறைகளை தீர்த்து வரும் மாவீரனாக திகழும் நடிகர் சோனு சூட்டை ஏஐ தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட கெட்டப்புகளில் உருவாக்கி அசத்தி உள்ளனர்.

ஜோக்கர் முதல் கிரேக்க நாட்டின் அரசன் வரை ஏகப்பட்ட லுக்கில் சோனு சூட் இருக்கும் போட்டோக்களை பார்த்து ஸ்தம்பித்துப் போன அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவற்றை ஷேர் செய்து ஹேப்பியாகி உள்ளார்.

Sonu Sood turns from Joker to Greek warrior via AI magic

இந்த லுக்கெல்லாமே உங்களுக்கு ஃபர்ஃபெக்ட்டாக சூட் அகிறது. இப்படியெல்லாம் நடிங்க பாஸ் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஃபயர் எமோஜிக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஜோக்கராக சோனு சூட்: சந்திரமுகி, அருந்ததி, தபாங், ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய சோனு சூட் கோவிட் நேரத்தில் சேவியராக மாறி பலரது குறைகளை தீர்க்க தன்னிடம் இருந்த பணத்தையும் தனது நண்பர்கள் மூலமாகவும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் குவிந்த பணத்தையும் கொண்டு உதவி செய்து மிகப்பெரிய சேவகராக மாறினார். இந்நிலையில், சோனு சூட்டை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வித விதமான ஹாலிவுட் பட ஹீரோக்களின் கெட்டப்புகளில் மாற்றி உருவாக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அதில், முதலாவது புகைப்படமே ஜோக்கர் வேடத்தில் சோனு சூட் மெர்சல் காட்டுகிறார்.

Sonu Sood turns from Joker to Greek warrior via AI magic

அர்னால்டு போல: டெர்மினேட்டர் படம் அர்னால்டு போல கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு அதிரடி காட்டி வருகிறார் சோனு சூட். மேலும், பாக்ஸிங் வீரர், சாமியார், சமையல்காரர், டாம் க்ரூஸ் கெட்டப், கோட்சூட் போட்டுக் கொண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் போஸ், மாவீரன் போஸ் என ஏகப்பட்ட விதமாக சோனு சூட்டை அலங்கரித்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது ஏஐ.

ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், மேக்கப் மேன்கள் என அனைவரது வேலைக்கும் ஒரே நேரத்தில் ஏஐ வேட்டு வைத்துவிடும் போல இருக்கே என்றும் ரசிகர்கள் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இந்த டெக்னாலஜி வரமா? சாபமா? என்கிற கேள்விகள் எழுந்தாலும், இப்போதைக்கு இதனை பலரும் ரசிக்க ஆரம்பித்து இருப்பது மட்டுமின்றி இன்ஜினியர் படிப்பை போல ஏஐ படிப்புக்கும் டிமாண்ட் ஜாஸ்தியாகி வருகிறது.

Sonu Sood turns from Joker to Greek warrior via AI magic

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X