twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகளின் ஆன்லைன் வகுப்புக்கு மாட்டை விற்று செல்போன் வாங்கிய அப்பா.. உதவி செய்ய தேடும் பிரபல நடிகர்!

    By
    |

    சென்னை: தனது பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புக்காக, பசுமாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கியவருக்கு உதவ, பிரபல நடிகர் அவரை தேடி வருகிறார்.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, கடந்த 4 மாதமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் நண்பரை இழந்த இயக்குநர் சேரன்.. கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியவில்லை என உருக்கம்! கொரோனாவால் நண்பரை இழந்த இயக்குநர் சேரன்.. கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியவில்லை என உருக்கம்!

    பொருளாதார இழப்பு

    பொருளாதார இழப்பு

    இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். பலருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் வாழ்வாதாரங்களை ஏராளமானவர்கள் இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குச் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    ஸ்மார்ட்போன் தேவை

    ஸ்மார்ட்போன் தேவை

    லாக்டவுன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பல வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு லேப்டாப், கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் தேவை என்பதால் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.

    ஆன்லைன் வகுப்பு

    ஆன்லைன் வகுப்பு

    இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை அறிவித்துள்ளனர். அந்த மாநிலத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள கும்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் குமார். பால் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் மகள் அனு, மகன் வான்ஸ். இருவரும் முறையே, நான்கு மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.

    பசுமாட்டை விற்றார்

    பசுமாட்டை விற்றார்

    இவர்களுக்கு ஸ்மார்ட்போன் இல்லை. குல்தீப்பிடம் பணமும் இல்லை. இதனால் கடன் வாங்கியாவது ஸ்மார்ட்போன் வாங்க முயன்றார். அருகில் உள்ள வங்கிக்குச் சென்று கேட்டார். லோன் தர மறுத்துவிட்டனர். அக்கம் பக்கத்திலும் கடன் கேட்டுப் பார்த்தார். கையை விரித்துவிட்டனர் பிறகு, நொந்து போன அவர், படிப்பு முக்கியம் என்று கருதி, தனது வாழ்வாதாரமாக இருந்த பசுமாட்டை விற்றுவிட்டார் குல்தீப்.

    தகவல் தெரிந்தால்

    தகவல் தெரிந்தால்

    அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ரூ.6 ஆயிரம் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்திருக்கிறார் அவர். இதுபற்றிய செய்தி அங்குள்ள பத்திரிகைகளில் வெளியானது. இதைக் கண்ட சிலர் அதை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தனர். இதைக் கண்ட நடிகர் சோனு சூட், அதை தனது ட்விட்டரில் பக்கத்தில் ஷேர் செய்து, இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். அவரது பசுமாட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Recommended Video

    Thalapathy Vijay Effort, நிஜதிலும் வேலாயுதம் தான் | Real Hero Sonu Sood
    புகழும் நெட்டிசன்கள்

    புகழும் நெட்டிசன்கள்

    ஒருவர் தனக்கு டீட்டெய்ல் தெரியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் சோனு சூட்டை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். நடிகர் சோனு சூட், நடிகர் சோனு சூட், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, தனது பணத்தைச் செலவழித்து தொடர்ந்து உதவி செய்து வந்தார். விமானம் மூலமாகவும் பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர்.

    English summary
    Sonu Sood Vows to Help Himachal Man Who Sold Cow to Buy Smartphone for Child's Online Classes
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X