'இல்லைனா அரெஸ்ட்தான்..' சோனு சூட் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மோசடி.. நடிகர் எச்சரிக்கை!

By

மும்பை: மக்களுக்கு உதவி செய்துவரும் நடிகர் சோனு சூட் பெயரில் மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

Thalapathy Vijay Effort, நிஜதிலும் வேலாயுதம் தான் | Real Hero Sonu Sood

கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். பலருக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

தங்கள் வாழ்வாதாரங்களை ஏராளமானவர்கள் இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குச் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை.

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

அவர்களுக்கு தனது சொந்த செலவில், தனி பேருந்துகளை அமர்த்தியும் ரயில்களை ஏற்பாடு செய்தும் அனுப்பி வைத்தவர் நடிகர், பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்ட பலரை, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார்.

நீங்கள்தான் ஹீரோ

நீங்கள்தான் ஹீரோ

வெளிநாட்டில் சிக்கிய தமிழக மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்துள்ளார். இதையடுத்து அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள்தான் ஹீரோ என்று கூறுகின்றனர். இதற்கிடையே உதவிகேட்டு இப்போதும் தனக்கு ஏராளமான அழைப்பு வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

போலி ட்விட்டர் கணக்கு

போலி ட்விட்டர் கணக்கு

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் சோனுசூட் என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி, ஒரு நபர் மக்களை ஏமாற்றி வருவது தெரியவந்தது. இது சோனு சூட் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கைது செய்யப்படுவீர்கள்

கைது செய்யப்படுவீர்கள்

இதையடுத்து அந்த நபரை டேக் செய்து ட்வீட் செய்துள்ள நடிகர் சோனு சூட், 'அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். அதற்குள் மோசடி தனத்தை நிறுத்துங்கள்' என்று கூறியுள்ளார். பல நெட்டிசன்கள் இவர் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒருவர், இப்படி மோசடி செய்வதன் மூலம் சிறந்த மனிதரான சோனு சூட்டையும் களங்கப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X