Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சட்டவிரோத கட்டிட விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் பிரபல ஹீரோ!
மும்பை: சட்டவிரோத கட்டிட விவகாரத்தில் பிரபல நடிகர் சோனு சூட், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
தமிழில், விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், நடிகர் சோனு சூட்.
தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார்.
யாருய்யா டப்பிங் கொடுத்தது? விஜய் சேதுபதியின் உப்பெனா டிரைலர் ரிலீஸ்.. சரமாரி விளாசும் நெட்டிசன்ஸ்!

சிக்கிக் கொண்டனர்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவர், கொரோனா காலகட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தார். அதாவது, கொரோனாவுக்காக கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர்.

உதவி செய்தார்
ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், சோனு சூட், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, உதவி செய்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு
இந்நிலையில் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக, மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி மும்பை சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அங்கு அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை மாநகராட்சி
இதனால் அவர் உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். உயர்நீதிமன்றமும் அவர் மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு, மும்பை மாநகராட்சியிடம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அவரிடம் தெரிவித்தது. ஆனால் நடிகர் சோனு சூட், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வாபஸ் பெற்றார்
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா, வி.ராம சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சோனு சூட் திடீரென வழக்கை வாபஸ் பெற்றார். கட்டிடத்தை ஒழுங்குப்படுத்த மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்க இருப்பதால் வழக்கை திரும்ப பெறுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

எடுக்கக் கூடாது
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர். மேலும் கட்டிடத்தை ஒழுங்குப்படுத்தக்கோரி செய்யப்படும் மனுவில் இறுதி முடிவு எடுக்கும் வரை சோனு சூட் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.