வியக்க வைக்கும் படங்கள், வெப் தொடர்களுடன் Sony Liv.. பிரபல தயாரிப்பாளர் ட்வீட்

சென்னை: சினிமா ரசிகர்கள் மத்தியில் Sony Liv பிரபல ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

Recommended Video

OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar

இருந்த போதிலும் தென்னிந்திய ரசிகர்களை பெரிதாக ப்ரைம் வீடியோ, நெட்ப்ளிக்ஸ் கவர்ந்த அளவிற்கு Sony Liv கவரவில்லை.

அந்த குறையை போக்கும் வகையில் தமிழ் படங்கள், வெப் தொடர்கள் போன்றவற்றை நேரடியாக OTT யில் வெளியிடும் உரிமையை வாங்க Sony Liv களமிறங்கியுள்ளது.

OTTயின் வளர்ச்சி

OTTயின் வளர்ச்சி

திரையரங்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு புறம் குறைந்து வரும் நிலையில் OTT நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் படங்கள் நேரடியாக OTTயில் வெளிவருவது போல தமிழிலும் வர தொடங்கியுள்ளது.

சாதகமாக அமைந்தது

சாதகமாக அமைந்தது

தமிழில் முன்னதாக மிக குறைவாகவே படங்கள் OTTயில் நேரடியாக வந்தன. ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக அந்த நிலைமை மாறி நிறைய படங்கள் OTT யில் வந்து கொண்டிருக்கிறது. பெரிய ஹீரோக்களின் படங்களும் கூட. கொரோனா நோய் தொற்று ஒரு வகையில் OTT நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

படங்கள், வெப் தொடர்கள்

படங்கள், வெப் தொடர்கள்

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன்

Sony Liv OTT தளம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது Sony Liv நிறுவனம் விரைவில் தமிழில் வியக்க வைக்கும் படங்கள், வெப் தொடர்கள் உடன் வரவுள்ளது எனவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Sony Liv தளம் விரைவில் அறிவிக்கும் எனவும் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தற்போதைக்கு ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ராக்கி & நெற்றிக்கண், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, அருவி இயக்குனர் அருண் பிரபுவின் வாழ் ஆகிய படங்கள் Sony Liv ல் நேரடியாக வெளிவரவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X