வாழ் படத்தின் வெற்றியை தொடர்ந்து Sony Liv ல் அடுத்ததாக "திட்டம் இரண்டு"?
சென்னை: சினிமா ரசிகர்கள் மத்தியில் Sony Liv பிரபல ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இருந்த போதிலும் தென்னிந்திய ரசிகர்களை பெரிதாக ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் கவர்ந்த அளவிற்கு Sony Liv கவரவில்லை.
அந்த குறையை போக்கும் வகையில் முக்கியமான சில தமிழ் படங்களை நேரடியாக OTT யில் வெளியிடும் உரிமையை Sony Liv கைப்பற்றி அதனை வெளியிட்டு வருகிறது.

நல்ல வரவேற்பு
தமிழில் வாழ், கசட தபற, கடைசி விவசாயி, நரகாசூரன் ஆகிய படங்கள் Sony Liv ல் நேரடியாக வெளியாகவுள்ளது என முன்னரே தகவல்கள் வெளியாகின. அதன் படி வாழ் திரைப்படம் நேரடியாக Sony Liv ல் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜூலை தொடக்கத்தில்
ஆனால் ஜூலை மாதம் தொடக்கத்திலேயே நரகாசூரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பாராத வகையில் வாழ் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வர இம்மாத இறுதியில் நரகாசூரன் வெளியாகும் என பேசப்பட்டது. தற்போது அதுவும் பலிக்கவில்லை என தெரிகிறது.

நேரடி வெளியீடு
நரகாசூரன் ஆகஸ்ட் ரிலீசுக்கு தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக Sony Liv ல் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் வெளியாக உள்ளதாக பேசப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
இம்மாதம் 30ம் தேதி திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக Sony Liv ல் வெளிவரவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நரகாசூரன், கடைசி விவசாயி அடுத்த மாத OTT ரிலீசுக்கு தள்ளி போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











