தென்னிந்திய மார்க்கெட்டை உயர்த்தும் Sony Liv.. 4 முக்கிய படங்களை வாங்க பேச்சுவார்த்தை

சென்னை: சினிமா ரசிகர்கள் மத்தியில் Sony Liv பிரபல ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

Recommended Video

Kollywood Remake Movies 2021 | Pathu Thala, Google Kuttappan, Article 15

இருந்த போதிலும் தென்னிந்திய ரசிகர்களை பெரிதாக ப்ரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ் கவர்ந்த அளவிற்கு Sony Liv கவரவில்லை.

அந்த குறையை போக்கும் வகையில் முக்கியமான 4 தமிழ் படங்களை நேரடியாக OTT யில் வெளியிடும் உரிமையை வாங்க Sony Liv களமிறங்கியுள்ளது.

கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சுந்தீப் கிஷன், ஆத்மிகா, ஷ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் நரகாசூரன். இந்த படம் தயாரிப்பு நிறுவனத்தில் பிரச்சனையால் கிடப்பில் இருந்த நிலையில் தற்போது Sony Liv இந்த படத்தின் OTT ரிலிஸ் உரிமையை வாங்கியுள்ளதாக தெரிகிறது. படத்தின் இயக்குனர் இந்த படத்தின் புதிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். எனவே இது OTT ரிலிஸ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில்

பெரிய எதிர்பார்ப்பில்

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் ராக்கி. இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மீது நீண்ட நாட்களாவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் Sony Liv OTT தளத்தில் இந்த படம் நேரடியாக வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரில்லர் திரைப்படம்

திரில்லர் திரைப்படம்

ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக்கண்.கொரியன் த்ரில்லர் படமான Blind படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீதும் ஆரம்பத்திலிருந்து எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படமும் Sony Liv OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் கடைசி விவசாயி. மணிகண்டனின் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடமுண்டு. அந்த வகையில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இந்த படத்தின் மீதும் எப்போது ரிலிஸ் என ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வந்தனர். தற்போது இந்த படத்தின் OTT ரிலிஸ் உரிமையையும் Sony Liv வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Read more about: sony சோனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X