விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் விக்ரம்.

படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர். தொடர்ந்து படங்களில் நடித்துவந்த இவர் அரசியலிலும் கால் பதித்ததால், படங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாபநாசம் 2 படத்தின் அறிவிப்பு குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

இந்நிலையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது.

 தீவிர கமல் ரசிகர்

தீவிர கமல் ரசிகர்

லோகேஷ் கனகராஜ் தீவிரமான கமல் ரசிகர் என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனால் இந்தப் படம் சிறப்பான வகையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு சர்க்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆடியோ உரிமை

ஆடியோ உரிமை

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. இதுவும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சோனி மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் டீசரில் கமல் பேசிய பிரபல வசனமான ஆரம்பிக்கலாங்களா என்ற வசனத்தையும் தனது பக்கத்தில் கேப்ஷனாக வெளியிட்டுள்ளது.

பாடல் வெளியீடு?

பாடல் வெளியீடு?

வரும் 7ம் தேதி உலகநாயகனின் பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி முன்னதாக விக்ரம் படக்குழுவினர் கேக் வெட்டி கடந்த வாரத்தில் கொண்டாடினர். இந்நிலையில் கமலின் பிறந்தநாளையொட்டி படத்தின் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசை

அனிருத் இசை

அனிருத் இந்தப் படத்தின்மூலம் கமலுடன் இணைந்துள்ளார். முன்னதாக இந்தியன் 2 படத்தில் இந்தக் கூட்டணி இணைந்த நிலையில் படம் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல் -அனிருத் கூட்டணி இணையும் முதல் படமாக விக்ரம் இருக்கும். பாடல்கள் சிறப்பான வகையில் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X