பேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்
சென்னை: பேட்ட படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது.

ஏற்கனவே மரண மாஸ் லிரிக்கல் வீடியோ வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து உல்லாலா பாடல் ஸ்னீக்பீக்கும் வெளியானது. இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.
பேட்ட படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியது குறித்து சோனி மியூசிக் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ், சோனி மியூசிக், அனிருத் காம்போ மரண மாஸ் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
Comments


Click it and Unblock the Notifications