அஜித்தின் ‘வலிமை’ டீசர் ரிலீஸ் எப்போது?... சரியான நேரத்தை வெளியிட்ட சோனி மியூசிக்
சென்னை : அஜித்தின் சென்டிமென்ட் படி வலிமை படத்தின் டீசர் வெளியாகும் சரியான நேரத்தை சோனி மியூசிக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹுமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா, சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
இந்த படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், டீசர் க்ளிம்ப்ஸ், ஒர்க்கிங் ஸ்டில்ஸ், ஃபஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள், விசில் தீம் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இவற்றை கொண்டாடி வருகின்றனர். வலிமை அஜித் ஸ்டில்ஸ், எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் என அடுத்தடுத்து வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க வைத்து வருகின்றனர் படக்குழுவினர்.

வலிமை டிரைலர்
என்ன தான் படக்குழுவினர் தொடர்ந்து ஏதாவது வெளியிட்டு வந்தாலும், வலிமை அப்டேட் கேட்பதை அஜித் ரசிகர்கள் நிறுத்தவில்லை. டிரைலரை எப்போது ரிலீஸ் செய்ய போகிறீர்கள், ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணுங்க என போனி கபூரை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். வலிமை படம் பற்றி என்ன அப்டேட் வெளியிட்டாலும் உடனடியாக #ValimaiTrailer என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி விடுகிறார்கள்.

இன்று டிரைலர் ரிலீஸ்
ரசிகர்கள் ஓயாமல் கேட்டு வருவதாலும், ரிலீஸ் தேதி நெருங்கி வருவதாலும் டிரைலர் ரிலீஸ் தேதியை நேற்று படக்குழு உறுதி செய்தது. இதன்படி டிசம்பர் 30 ம் தேதியான இன்று வலிமை டிரைலர் வெளியிடப்படும் என அறிவித்தனர். எப்படியும் மாலையில் தான் வெளியிடுவார்கள் என்பது தெரிந்தாலும், என்ன நேரம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்.

என்ன டைம் தெரியுமா
இந்நிலையில் வலிமை டிரைலர் வெளியிடப்படும் நேரத்தை, படத்தின் இசை உரிமத்தை பெற்றுள்ள சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் சோனி மியூசிக் சவுத் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை டீசர் வெளியிடப்பட உள்ளதாம்.

சாதனை படைக்குமா
அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் வலிமை டிரைலர் நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசிற்கு முன் வியாபாரத்திலேயே வலிமை படம் போட்ட பட்ஜெட் தொகையை விட அதிகமான லாபத்தை சம்பாதித்து விட்டதால் ரிலீசிற்கு பிறகு எத்தனை கோடிகளை சம்பாதிக்கும், எத்தனை நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என்பது போன்ற ஆர்வங்கள் அதிகரித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











