புள்ளிங்களா ஆட ரெடியா.. பிகில் பாடல் வீடியோ ரிலீஸ்

பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’பிகிலு பிகிலு பிகிலுமா’ பாடல் வீடியோவை சோனி மியூசிக் சவுத் அதிகாரப்பூர்வமாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, விவேக், யோகி பாபு நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 200 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமையான இன்று ஹாலிவுட் திரைப்படமான டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், பிகில் மற்றும் கைதி உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக இந்த வாரமும் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sony Music South released Bigil Video Song

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு சோனி மியூசிக் சவுத், பிகிலு பிகிலு பிகிலுமா பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

கால்பந்தாட்ட போட்டியில் மைக்கேல் விஜய்யின் அணி வெற்றி பெற்ற பிறகு, விஜய்க்கும், நயன்தாராவுக்கும் மோதிரம் மாற்றி திருமணம் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம்பெறும்.

கால்பந்தாட்ட வீராங்கனைகள் மற்றும் நாயகி நயன்தாராவுடன் நடிகர் விஜய் இந்த பாடலுக்கு அசத்தல் நடனமாடுவார்.

புதுப்பேட்டையில் இடம்பெற்றிருந்த "வரியா வரியா" பாடல் ஸ்டைலில் வெறும் இசை மற்றும் பிகிலு பிகிலுமா வரிகளோடு மட்டுமே இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.

பிகில் திரைப்படம் வெளியாகி ஒருவாரம் ஆகியுள்ள நிலையில், சோனி மியூசிக் சவுத் தற்போது இந்த பாடலின் ஹெச்.டி. வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோவை நாளைக்குள் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திற்கு கொண்டு வர விஜய் ரசிகர்கள் வைரலாக இந்த லிங்க்கை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X