2012-ல் இந்தியாவில் ரூ 217 கோடி வசூலைக் குவித்த சோனி பிக்சர்ஸ் படங்கள்!

By Shankar

இந்த 2012-ம் ஆண்டு சோனி நிறுவனத்துக்கு ரொம்ப நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது.

அந்த நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட ஹாலிவுட் படங்கள் நல்ல வசூலைக் குவித்துள்ளன.

சோனி பிக்சர்ஸ் உலகளாவிய பொழுது போக்கு நிறுவனம் திரைப்படங்கள் தயாரிப்பது தொலைக்காட்சிகள் நடத்துவது, நிகழ்ச்சிகள் தயாரிப்பது,திரைப்பட விநியோகம்,ஸ்டுடியோ வசதிகள் செய்வது,டிஜிட்டல் நுட்பத்தை மேம்படுத்துவது, புதுப்புது பொழுது போக்கு அம்சங்களை வடிவமைத்து வழங்குவது என்று பல்வேறு வேலைகளில் இறங்கியுள்ளது. 159 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.

ரூ 217 கோடி வசூல்...

ரூ 217 கோடி வசூல்...

இந்தியாவில் இதன் துணை நிறுவனமான 'சோனி பிக்சர்ஸ் இந்தியா' தொடர்ந்து குறிப்பாக ஹாலிவுட் படங்களை வெளியிட்டு வருகிறது.

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிறுவனம் வெளியிட்ட படங்கள் இந்தியாவில் மட்டும் 2012ல் 217 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.

இது கடந்த ஆண்டு 12 தலைப்புகளில் வெளியிடப்பட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலாகும். முன்பு எப்போதும் தொட்டுப் பார்த்திராத சாதனையாக இது கருதப்படுகிறது.

அமேஸிங் ஸ்பைடர்மேன்

அமேஸிங் ஸ்பைடர்மேன்

கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 2 படங்கள் மாபெரும் வார இறுதி வசூலை அள்ளியிருக்கின்றன. 'தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி' மட்டும் வெளியான வார இறுதியிலேயே 34 கோடியை அள்ளியது. 'தி அமேசிங் ஸ்பைடர் மேன்' தேசமெங்கும் 650 நகரங்களில் வெளியிடப்பட்டது புது வரலாறு.

ஸ்கைஃபால்

ஸ்கைஃபால்

அடுத்தபடி அதிக வசூல் செய்த படம் 'ஸ்கைஃபால்'. இப்படம் முதல் வார இறுதியிலேயே 27.4 கோடி குவித்தது. பெரும்பாலும் 4 மொழிகளில் வெளியானது. சோனியின் கடந்த ஆண்டு வெளியீடுகளில் பாதியளவு 3டி தொழில்நுட்பத்தில் வெளியானவைதான்.

முன்னணியில் சோனி

முன்னணியில் சோனி

சோனி பிக்சர்ஸ் இந்தியா நிருவனத்தின் நிர்வாக இயக்குநர் கெர்சி தருவாலா இதுபற்றிக் கூறும் போது 'இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. அதன் வியாபார எல்லை படிப்படியாக சீராக அதிகரித்து வருகிறது. இந்திய மொழிகளிலும் இதன் தொடர்ச்சியான வளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. ஹாலிவுட் படங்களை வெளியிடுவதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். குறிப்பிடத்தக்க இடத்திலும் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பங்களிப்பு உயர்ந்த இடத்தில் இருக்கிறது' என்றார்.

2013-ல் வரவிருப்பவை...

2013-ல் வரவிருப்பவை...

இந்த 2013ன் ஹாலிவுட் வரவுகள் - வெளியீடுகள் பற்றி சோனி பிக்சர்ஸ் இந்தியா இப்போதே திட்டமிட்டுள்ளது. டாரன்டினோவின் 'டி ஜாங்கோ அன் செயின்டு' (Django unchained) தான் சோனியின் அடுத்த வெளியீடு.

மனோஜ் ஷியாமளன் படம்

மனோஜ் ஷியாமளன் படம்

மனோஜ் நைட்ஷியாமளனின் 'ஆப்டர் எர்த்' (after Earth) இது ஜேடன் ஸ்மித்,வில் ஸ்மித் நடித்தபடம். ரோலண்ட எம்மெரிச்சீன் 'ஒயிட் ஹவுஸ் டவுன்' (White house Down) வர உள்ளது. 'எலிசியம்' (Elysium) இப்படம் மேட் டாமன் நடிக்கும் படம். 'கேப்டன் பிலிப்ஸ்' (captain Philips) இன்னொரு படம்.

ஈவில் டெத் -2

ஈவில் டெத் -2

முந்தைய பாகங்களில் வசூலை அள்ளிய 'ஈவில் டெத்' (Evil Dead) 'க்ரோன் அப்ஸ் 2 (Groun UPS 2 ) 'தி ஸ்மர்ப்ஸ் - 2'(3D(The Smurfs - 2) வெளிவர இருக்கின்றன.

சோனி பிக்சர்ஸ் 2013லும் அழுத்தமான தடத்தைப் பதிக்கவுள்ளதாக நம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X