Soodhu Kavvum 2: உடையுறதுக்கு அடுத்த ஃபர்னிச்சர் ரெடி.. சூது கவ்வும் 2 ஸ்டில்ஸை பாருங்க!

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து விஜய்சேதுபதியை ஏகப்பட்ட ரசிகர்கள் விரும்பும் நாயகனாக மாற்றியது.

அந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான காசு பணம் துட்டு மணி மணி, மாமா டவுசர் கழண்டுச்சு உள்ளிட்ட பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.

10 வருஷம் கழித்து அந்த படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இதில், விஜய்சேதுபதிக்கு பதிலாக சிவா நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் மேக்கிங் ஸ்டில்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Soodhu Kavvum 2 exclusive stills out now

கல்ட் கிளாசிக்: கடத்தல்காரனை கொண்டாட முடியுமா? அரசியல்வாதியின் வாரிசுகள் நடத்தும் கடத்தல் நாடகம் என நலன் குமாரசாமி குறைந்த பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்துக் கொண்டு 10 வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச தரமான கல்ட் கிளாசிக் திரைப்படம் தான் சூது கவ்வும். ஹீரோயின் கதாபாத்திரமே ஹீரோயின் ஹாலுசினேஷன் என்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் வித்தியாசம் காட்டி மிரட்டியிருப்பாங்க.. அந்த படத்தின் இரண்டாம் பாகம் சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும் என்கிற தலைப்பில் உருவாகி வருகிறது.

இயக்குநரும் மாறியாச்சு ஹீரோவும் மாறியாச்சு: சந்திரமுகி 2 படத்தையாவது பி. வாசுவே இயக்கினார். ஆனால், இந்த படத்தை அர்ஜுன் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், விஜய்சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடித்து வருகிறார். தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 அவருக்கு கை கொடுத்த அளவுக்கு சமீப காலமாக எந்தவொரு படமும் கைகொடுக்கவே இல்லை. இந்நிலையில், சூது கவ்வும் 2 என்ன ஆகப் போகிறதோ என்கிற கேள்வி தான் எழுகிறது.

அடுத்த ஃபர்னிச்சர்: எம்.எஸ். அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மேக்கிங் ஸ்டில்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், சத்யராஜ், ராதா ரவி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். தொடர்ந்து பார்ட் 2 படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் முதல் பட பெயரை கெடுத்து வருவது போல அடுத்த ஃபர்னிச்சரை உடைக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X