ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடுப்பு போட்டோஷூட் நடத்திய சஞ்சிதா ஷெட்டி .. கடுப்பான பேன்ஸ்!
சென்னை: இடையழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக போட்டோஷூட் நடத்திய நடிகை சஞ்சிதா ஷெட்டியை ரசிகர்கள் வச்சி செய்து வருகின்றனர்.
கர்நாடகாவில் பிறந்த சஞ்சிதா ஷெட்டி,கன்னடத்தில் வெற்றிபெற்ற முங்காரு மலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, மிலானா, உடா,பய.காம் போன்ற கன்னடப் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சஞ்சிதா ஷெட்டி: கதாநாயகியாக சஞ்சிதா பல திரைப்படங்களில் நடித்திருந்த போதும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் இவருக்கு இன்றுவரை மிகப்பெரிய அடையாளமாக உள்ளது. இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான முதிர்ந்த கதாபாத்திரத்தில் கேங்க்ஸ்டர் லீடராக நடித்திருக்க இந்த திரைப்படம் வசூலை அள்ளியது. இதில் விஜய் சேதுபதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் காதலியாக சஞ்சிதா ஷெட்டி நடித்திருப்பார்.
பார்ட்டி படத்தில்: மேலும் இயக்குனர் வெங்கட்பிரவின் கலர்ஃபுல் படமான பார்ட்டி என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தில், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெஸன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மிக விரைவிலேயே வெளியாகும் என நம்பப்படுகிறது.
ரம்யா பாண்டியனுக்கு போட்டியா? தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தனி இடத்தை பிடித்துள்ள சஞ்சிதா இப்பொழுது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராகி கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் இடை அழகு தெரியும்படி, ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த சிலர், ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடுப்பு போட்டோஷூட்டா என்று கேட்க, கடுப்பான ரம்யா பாண்டியன் பேன்ஸ் இதுக்கு பேரு இடுப்பா என்று கிண்டலடித்து வருகின்றனர்.
10க்கும் மேற்பட்ட படங்களில்: இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ வேடத்தில் நடித்த பஹீரா படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் சுமாராக ஓடியது.தற்போது இவர் பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, ஜானி, பார்ட்டி போன்ற படங்களில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











