twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூரிச் திரைப்பட விழாவில் சூது கவ்வும்!

    By Mathi
    |

    சென்னை: இயக்குநர் நளன் குமாரசாமியின் வெற்றிப் படமான சூது கவ்வும் திரைப்படம் சுவிஸ் நாட்டின் ஜூரிச் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

    மிக அட்டகாசமான காமெடி- த்ரில்லரான இந்தப் படம் சமீபத்திய இந்தியத் திரைப்படங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    ஜூரிச் ஹிரைப்பட விழா வரும் 25-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த சூது கவ்வும் திரைபப்டம் திரையிடப்படுகிறது.

    ஜூரிச் விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ்ப் படம் இது மட்டுமே. அத்துடன் இந்தியப் படங்கள் பலவும் திரையிடப்பட இருக்கின்றன.

    குலாபி கேங்ம் லையர்ஸ் டைஸ், லூசியாம, மான்ன்சூன் சூட்அவுட், ஷிப் ஆப் தி தீசியஸ், கோர்ட், ஃபாண்ட்ரி, டிட்லி ஆகிய இந்திய படங்களும் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.

    சூதுகவ்வும்

    சூதுகவ்வும்

    நயன்தாராவுக்கு செலவு செய்த சிம்ஹா... சாப்ட்வேர் என்ஜீனியர் நண்பன், குடிகார ரூம்மேட், ஆள்கடத்தல் விஜய் சேதுபதி என அட்டாகாச காம்பினேசனில் அதிரடி காமெடியை சூது கவ்வும் படத்தில் பரிமாறியிருப்பார்அறிமுக இயக்குநர் நலன் குமாரசாமி.

    வசன சரவெடி

    வசன சரவெடி

    சூதுகவ்வும் படத்தின் வசனங்கள் வரிக்கு வரி சரவெடியை கிளப்பியிருக்கும்

    ''ஃப்ராடுத்தனம் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''

    'சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!'' போன்ற வசனங்கள் சில சாம்பிள்தான்.

    காசு பணம் துட்டு மணி

    காசு பணம் துட்டு மணி

    படத்தின் பாடல்களும் கூட எளிமையாக அனைவரையும் ரசிக்கவைக்கும் வகையில் அமைந்திருந்தது. காசு பணம், துட்டு மணி... மணி.... இன்றைக்கு பல இடங்களில் பாடப்படும் பாடலாக உள்ளது.

    குறைந்த செலவில்

    குறைந்த செலவில்

    குறைந்த செலவில் வெளிவந்து பலரது பாராட்டையும் வசூலையும் வாரிக் குவித்த ‘சூது கவ்வும்' படம் தமிழ் திரை உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பெற்றது. இந்தப் படம் தற்பொழுது உலக அங்கீகாரம் பெறப்போகிறது.

    சர்வதேச அங்கீகாரம்

    சர்வதேச அங்கீகாரம்

    ஜூரிச் திரைப்பட விழா வருகிற 25ந் தேதி முதல் அடுத்த மாதம் 5ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள சூதுகவ்வும், பேஸ்ட்ரி, லூசியா, போர்ட் ஆகிய படங்கள் தேர்வாகி இருக்கிறது. இயக்குனர் நலன் குமாரசாமி இதில் கலந்து கொள்கிறார்.

    திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். சூது கவ்வும் திரையிடப்படும் முதல் சர்வதேச திரைப்பட விழா இது.

    English summary
    Nalan Kumarasamy-directed Tamil dark comedy "Soodhu Kavvum", which revolves around three misfit kidnappers, will have its first international screening at upcoming 10th Zurich Film Festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X