அசுரனுக்கு அப்புறம் சூரரைப் போற்று.. சூர்யாவுக்கு வெயிட்டான தீமை இறக்கியிருக்காரு ஜி.வி. பிரகாஷ்!
Recommended Video
சென்னை: சூர்யாவின் மாறா தீம் பாடல் வெளியாகி மிரட்டி வருகிறது. சந்தோஷத்தில் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
கடந்த சில வருடங்களாகவே சூர்யா சினிமாவில் தடுமாறுகிறார். ஒரு பிரம்மாண்ட வெற்றி அவரால் பெற முடியவில்லை. இதனை அடுத்து கடந்த வருடம் காப்பான் வெளியானது.

படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. வசூல் ரீதியாகவும் பெரிய சறுக்கலை சந்தித்தது. இதனை அடுத்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சூர்யா.
சுதா கோங்காரா உடன் இணைந்தார் சூர்யா இவர் இதற்கு முன் இறுதிச் சுற்று பட த்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்தனர்.
படத்தை பற்றிய அப்டேட்காக சூர்யா ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ப கடந்த 7 ஆம் தேதி சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியானது. இது வெளியாகி சூர்யா ரசிகர்களை தவிர சினிமா ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியது.
இன்று வரை அந்த டீசர் சாதனை படைத்து வருகிறது. தற்போது அப்படத்தில் வரும் மாறா பாடல் வெளியாகி உள்ளது.
https://smi.lnk.to/MaaraTheme
இப்பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வெளியாகி சிறிது நேரத்தில் பாடல் டிரெண்ட் ஆகி வருகிறது.
பாடலில் வரும் வரிகள் சூர்யாவின் படத்தின் கதாபாத்திரத்தை வெளிபடுத்துவதை போல் உள்ளது. இப்பாடலை சூர்யா பாடியுள்ளார்.
இதற்கு முன் சூர்யா அஞ்சான் படத்தில் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











