Soorarai Potru Hindi remake: அடுத்த ஆண்டிற்கு ரிலீஸ் தள்ளிப்போன சூரரைப் போற்று இந்தி ரீமேக்.. ஏன்?
சென்னை: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப் போற்று படம் மிகபெரிய வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை சுதா கொங்கராவே இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
படத்தை சூர்யா தயாரித்துவரும் நிலையில், அக்ஷய் குமார் படத்தின் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தள்ளிவைப்பு: நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான சூரரைப் போற்று படம் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. ஓடிடியில் வெளியான இந்தப் படம் சூர்யாவின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் பாடல்களும் சிறப்பாக அமைந்தன. கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப்படம் வெளியானது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யாவின் கேரக்டரில் பாலிவுட் சூப்பர் ஹீரோ அக்ஷய் குமார் நடித்துள்ள நிலையில், அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே துவங்கிய நிலையில் படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ரசிகர்களும் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
படத்தின் சூட்டிங்கின்போது சுதா கொங்கராவுக்கு விபத்து ஏற்பட்டு காயமேற்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இதனால் சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தை தயாரித்துவரும் சூர்யா, படத்தில் ஒரு கேமியோ ரோலிலும் நடிக்கவுள்ளாராம். மேலும் படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கியமான ரோலில் நடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் மோகன்பாபு நடித்த கேரக்டரில்தான் சரத்குமார் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சுதா கொங்கரா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இசையமைப்பாளர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் அவர் செய்துள்ள மேஜிக்கை உலகம் பார்க்க தான் ஆவலாக உள்ளதாகவும் தனது ட்வீட்டில் அவர் கூறியுள்ளார். மேலும் படம் பாலிவுட்டை அதிர வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கவுள்ள படமும் நெருப்பாக அமையும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக் செப்டம்பர் 1, 2023ல் ரிலீசாகவிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 16ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











