100 மாணவர்கள்.. நடுவானில் ஆடியோ லான்ச்.. மாஸ் காட்டவுள்ள சூரரைப் போற்று!

By Staff

Recommended Video

Soorarai Pottru Second Single | Veyyon Silli | Surya | Sudha Kongara

சென்னை: உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக சூரரை போற்று திரைப்படத்தின் பாடல் விமானத்தில் வானில் பறந்தபடி வெளியாக உள்ளது.

காப்பான் பட வெற்றிக்கு பிறகு இறுதிச் சுற்று இயக்குனர் சுதா கொங்கரா உடன் இணைந்தார். படத்திற்கு சூரரை போற்று என்று தலைப்பு வைத்தனர்.

Soorarai potru second single going to launch in mid air

ஒரு விமானியின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை கலந்து படமாக எடுத்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் துவங்கியதிலிருந்தே அப்டேட்காக சூர்யா ரசிகர்கள் காத்து இருந்தனர். அதற்கேற்ப கடந்த மாதம் 7 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகி சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களும் கொண்டாடும் வகையில் டீசர் அமைந்தது.

இதனை அடுத்து படத்தின் தீம் மியூசிக் " மாறா தீம்" சிங்கிள் டிராக்காக வெளியானது. இதுவும் ரசிகர்களை திருப்திப்படுத்தியது.
இதனை அடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வருகின்ற 13 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஒரு தகவல் வைரல் ஆக துவங்கியது. சூரரை போற்று படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் நடக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது படக்குழு வேறு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் "வெய்யோன் சில்லி" பாடலை நாளை ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் போயிங் 737 ரக விமானத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் முதல் முறையாக வானத்தில் பறந்தபடி ஆடியோ லான்ச் அரங்கேற உள்ளது.

இந்த செய்தி தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. உலகில் முதல் முறையாக இது போன்ற ஒரு பாடல் வெளியீட்டு விழா நடக்கப்போகிறது.

மேலும், இதுவரை விமானத்தில் பறக்காத 100 மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. பல்வேறு பள்ளிகளில் இதற்காக கட்டுரைப் போட்டிகள் நடத்தி மாணவர்களை தேர்வு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X