காதலர் தின ட்ரீட்டாக வருகிறது வெய்யோன் சில்லி.. சூரரைப் போற்று செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!

By staff

Recommended Video

Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

சென்னை: சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே சூர்யா சினிமாவில் தடுமாறுகிறார். ஒரு பிரம்மாண்ட வெற்றி அவரால் பெற முடியவில்லை. இதனை அடுத்து கடந்த வருடம் காப்பான் திரைப்படம் வெளியானது.

Soorarai Potru second Single update arrived

படத்திற்கு விமர்சனம் நன்றாக கிடைத்தாலும் வசூல் ரீதியாக சற்று சறுக்கியது. இதனை அடுத்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சூர்யா. சுதா கொங்கரா உடன் இணைந்தார் சூர்யா. இவர் இதற்கு முன் இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவர் இணைந்த இப்படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்தனர்.

படத்தை பற்றிய அப்டேட்காக சூர்யா ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ப கடந்த 7 ஆம் தேதி அன்று சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியானது. இது வெளியாகி சூர்யா ரசிகர்களை தவிர சினிமா ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

இன்று வரை அந்த டீசர் சாதனை படைத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்படத்தில் வரும் மாறா பாடல் வெளியானது. இப்பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலாக உள்ளது. பாடல் வெளியாகி சிறிது நேரத்தில் டிரென்டு ஆனது அது இன்று வரை அதே டிரென்டிங்கில் உள்ளது. இப்பாடலை தற்போது வரை சுமார் 1. 9 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் அடுத்த பாடல் இரண்டாவது சிங்கிளாக வெளியாக உள்ளது. இந்த பாடல் பெயர் "வெய்யோன்சில்லி" என்றும் இதனை ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார் என்றும் பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்பாடல் வரும் 13 ஆம் தேதி மாலை வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவிட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அடுத்த நாள் காதலர் தினம் என்பதால் இப்பாடல் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X