போட்ரா வெடியை.. அடிடா தாரை தப்பட்டையை.. சூரரைப் போற்று டீசர்.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை : திரையரங்கில் வெளியிட்ட சூரரைப்போற்று படத்தின் டீசரை, தாரை தப்பட்டைகள் முழங்க , ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து ரசிகர்கள் பார்த்தனர்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் சூரரைப்போற்று இந்த படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கார இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டீசர் ஜனவரி 7 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

 Soorarai potru tamil movie teaser out

இதனையடுத்து ரசிகர்களுக்காக டீசர் இணையத்தில் வெளியாவதற்கு முன் போரூரில் உள்ள ஜி.கே.சினிமாஸில் திரையிடப்பட்டது. இதற்கு வந்த சூர்யா ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் திரையரங்கு வந்து தங்களின் ஆட்டங்களை துவங்கினர். அதை தாண்டி பட்டாசுகள் வெடித்தும் கலர் பூசி திரையரங்கிற்கு டீசரை பார்க்க சென்றனர் .

ரசிகர்களின் பெருவெள்ளத்தினால் போரூர் சற்று திக்கு முக்காடியது. ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதனால் சூர்யா மாஸ்அப் சிறப்பாக செய்பவர்கள் செய்து அனுப்பலாம் என்று சில நாட்கள் முன்பே ட்விட்டரில் தெரிவிக்கபட்டு இருந்தது .

 Soorarai potru tamil movie teaser out

அதே போல முதலில் திரையரங்குகளில் நுழைந்தவுடன் சூர்யா ரசிகர்களின் ஆரவாரங்களை கட்டுப்படுத்த முடியவில்லை அவர்களின் உற்சாகத்தை மெருகேற்ற முதலில் சூர்யாவின் மேஸ்அப்புகள் போடப்பட்டது அதன் பின் கடைசியாக சூரரைபோற்று படத்தின் டீசர் போடப்பட்டது.

சூரரை போற்று சூர்யா இவர் தானா? இந்தியன் ஏர்லைன்ஸ் & ஜெட் ஏர்வேஸை காலி பண்ணாராமே..!

 Soorarai potru tamil movie teaser out

சூர்யா ரசிகர்கள் சுமார் 700 பேருக்கு மேல் இந்த டீசரை காண போரூர் ஜீ.கே.சினிமாஸ் வந்து இருந்தனர். தாரை தப்பட்டை வெடி வெடித்து வந்த ரசிகர்கள் இப்படி வெறித்தனமான டீசரை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட டீசர் பிரம்மிப்பாக இருந்தது என்று கூறலாம். இதுவரை யாரும் பார்க்காத ரௌத்திரம் மிக்க கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சூர்யா என்று மட்டும் தெரிகிறது. சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இந்த டீசர் என்றே சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X