சூர்யா ரசிகர்களுக்கு வேற லெவல் பொங்கல் பரிசு.. நல்ல சேதியும் சீக்கிரம் வருதாம்!
சென்னை: சத்யம் திரையரங்கில் இன்று காலையில் தொடங்கிய தம்பி இசை வெளியீட்டு விழா நிறைவு பெற்றுள்ளது.
இந்த விழாவில் பேசிய 2டி என்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், வரும் பொங்கலுக்கு சூரரைப் போற்று டீஸர் வருகிறது என்ற மாஸ் அப்டேட்டை கூறியுள்ளார்.
தம்பி இசை வெளியீட்டு விழாவில் இறுதியாக பேசிய நடிகர் சூர்யா, சீக்கிரமா ஒரு நல்ல சேதி சொல்றேன் எனக் கூறியுள்ளார்.
சூரரைப் போற்று டீஸர்
கார்த்தியின் தம்பி இசை வெளியீட்டு விழா, கடைசியில் சூர்யாவின் சூரரைப் போற்று டீஸர் அப்டேட் விழாவாக மாறியுள்ளது. தம்பி இசை வெளியீட்டு விழாவில் மேடை ஏறி பேசிய 2டி என்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், வரும் பொங்கலுக்கு சூரரைப் போற்று டீஸர் வருகிறது என்ற மாஸ் அப்டேட்டை கூறியுள்ளார்.
டிரெண்டிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரைப் போற்று அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்தி, ஜோதிகா நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூரரைப் போற்று டீஸர் அப்டேட் வெளியான நிலையில், சூர்யா ரசிகர்கள் சூரரைப் போற்று டீஸர் ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இது ஜாலியான படம்
தம்பி படத்தின் டீஸரை பார்த்தவர்கள், தம்பி சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றும் ரொம்ப சீரியஸான படம் என்றும் நினைத்திருப்பார்கள், ஆனால், தம்பி ரொம்ப ஜாலியான படம் என்று படத்தின் எடிட்டர் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
கார்த்தியின் ரசிகர் மன்ற தலைவர் நித்யானந்த் நள்ளிரவில் தம்பி இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வர பயணம் செய்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வாகனம் ஓட்டி செல்வதை ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என நடிகர் சூர்யா அட்வைஸ் கூறியுள்ளார்.
சீக்கிரமா நல்ல சேதி சொல்றேன்
தம்பி படத்தின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அது குறித்த பாசிட்டிவ் விஷயங்களை கேட்டு வருகிறேன். கார்த்தி மற்றும் ஜோதிகா திறமையான நடிகர்கள், ஒரு காட்சியில் ரியலாக அழுது நடித்துள்ளனர் என்று தம்பி படம் குறித்து பேசி வந்த சூர்யாவை நோக்கி ரசிகர்கள் சூரரைப் போற்று அப்டேட் கேட்க, சீக்கிரமா நல்ல சேதி சொல்றேன் என்றார்.


Click it and Unblock the Notifications











