கல்கி 2898 ஏ.டி படத்தில் கிருஷ்ணராக நடித்த சூர்யாவின் நண்பருக்கு குவியும் பாராட்டு.. யார் தெரியுமா?

சென்னை: வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் கல்கி 2898 ஏ.டி. நாக் அஸ்வின் இயக்கிய இந்த படம் நேற்று அதாவது ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் தனது அசாத்திய இசைத் திறமையால் படத்தை உலகத் தரத்திற்கு தூக்கி நிறுத்த முக்கியமான காரணம் ஆகின்றார் சந்தோஷ் நாராயணன். படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்டது.

Prabhas

படம் சமகாலத்தில் இருந்து கிட்டத்தட்ட 874 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதைப் போன்று காட்டப்படுகின்றது. மகாபாரத காலத்தில் தொடங்கும் இந்த கதை அதன் பின்னர் நேரடியாக 6000 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் கதைக்கு வருகின்றது. உலகத்தின் முதல் நகரமான காசி எப்படி உலகத்தின் கடைசி நகரமானது என்பதற்கு மகாபாரத காலத்து கதையைச் சொல்லும்போதே விவரிக்கப்பட்டுவிட்டதால் படம் எந்த இடத்திலும் குழப்பாமல் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுத்துள்ளது என்றே குறிப்பிடவேண்டும்.

Prabhas

படத்தின் ஆரம்பகக் காட்சி, இண்டர்வெல் காட்சி மற்றும் க்ளைமேக்ஸிற்கு முன்னர் சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகள் பிரமாண்டத்தின் உச்சகட்டம் எனக் கூறும் அளவிற்கு காட்சியாக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் பாதியில் கமல் ஹாசன் புதுப் பிரபஞ்சம் வந்து கொண்டு உள்ளது எனக் கூறும் காட்சியெல்லாம் தியேட்டரே திகிலில் உறைந்த தருணம் எனக் குறிப்பிடலாம்.

Prabhas

வசூல் வேட்டை: படம் ரிலீஸுக்கு முன்னரே வசூல் வேட்டையைத் தொடங்கியிருந்தாலும், படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் கட்டாயம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனிலும் படம் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ப்ரீ புக்கிங்கில் படம் கிட்டத்தட்ட 37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. மேலும் நேற்று இந்தியாவிலும் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட காட்சிகளை மைய்யப்படுத்திப் பார்க்கும்போது படம் முதல் நாளில் குறைந்த படசம் 175 கோடி ரூபாயும் அதிக பட்சம் 200 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்க வாய்புள்ளது என கூறப்படுகின்றது.

Prabhas

கேமியோக்கள்: படத்தில், படக்குழு அறிவித்திருந்த நடிகர் நடிகைகள் இடம் பெற்றிருந்தாலும் படக்குழு தரப்பில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்த பிரபலங்கள் பலர் உள்ளனர். அவர்களில் விஜய் தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோர் வந்துள்ளனர். அதேபோல் படத்தின் முதல் காட்சியிலும் ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சியிலும் வரும் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார்கள் என்ற தகவலை அந்த காதாபாத்திரத்தில் நடித்த நடிகரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அந்த நடிகர் தெரிவித்த பின்னர்தான் பலருக்கும் தெரியவந்துள்ளது.

Prabhas

சூரரைப் போற்று நடிகர்: இதனால் நடிகரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்தி வருகின்றனர். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிருஷ்ண குமார் தான் கல்கி 2898 ஏ.டி படத்தில் கிருஷ்ணராக நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு சூரரைப் போற்று படத்திற்காகவே பலரும் பராட்டிய நிலையில், தற்போது அதிகப்படியான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தின் முதல் காட்சியில் நடித்ததை நினைத்து அவரே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். இவரது பதிவைப் பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Prabhas

More from Filmibeat

Read more about: prabhas பிரபாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X