சிறப்பு அனுமதியுடன் நடக்கிறது.. சென்னை ஏர்போர்ட்டில், சூர்யாவின் சூரரைப்போற்று ஆடியோ ரிலீஸ் விழா

By

Recommended Video

Maara Theme | Surya | Soorarai Pottru | Sudha Gongara

சென்னை: சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை விமான நிலையத்துக்குள் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

ஏர் டெக்கான் விமான நிறுவனரான பெங்களூரைச் சேர்ந்த் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், சூரரைப் போற்று.

இதில் நடிகர் சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

மோகன்பாபு

மோகன்பாபு

'துரோகி', 'இறுதிச்சுற்று' படங்களை இயக்கிய சுதா கொங்கரா இதை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ப் படத்தில் நடித்துள்லார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

உயர்ந்தது பட்ஜெட்

உயர்ந்தது பட்ஜெட்

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான முதல் நாளிலேயே அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.

தனியார் விமானம்

தனியார் விமானம்

விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.
இந்த விமானத்துக்கு ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.47 லட்சமாம். 15 நாள் விமானத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது.

பாடல் வெளியீடு

பாடல் வெளியீடு

இதனால்தான் பட்ஜெட் அதிகமானது என்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் 13 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்காகப் படக்குழு சிறப்பு அனுமதி பெற்றுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X