twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூரரைப்போற்று டெலிட்டட் சீன்..ஏன் எடுத்தீங்க நல்லாத்தானே இருக்கு!

    |

    சென்னை : சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட டெலிட்டட் சீன் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    சூர்யா நடிப்பில் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது .

    டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகிய இப்படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது.

    16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா! 16 திருப்பங்கள்.. 4 மணிநேரங்கள்.. செரும்பருத்தி தொடரோட க்ளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா!

    சூரரைப்போற்று

    சூரரைப்போற்று

    மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய சூரரைப்போற்று படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்திய அளவில் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியானது.

    திரும்பி பார்க்கவைத்த படம்

    திரும்பி பார்க்கவைத்த படம்

    அபர்ணா பாலமுரளி,ஊர்வாசி,கருணாஸ், மறைந்த நடிகர் பூ ராம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

    இந்தி ரீமேக்

    இந்தி ரீமேக்

    தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவே இந்தியில் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அபர்ணா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இவர் பிரபல இந்தி சீரியல் நடிகை ஆவார்.

    டெலிட்டட் சீன்

    இந்நிலையில், சூரரைப் போற்று ​​படத்திலிருந்து டெலிட்டட் செய்யப்பட்ட சண்டை காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மாறன் வேடத்தில் இருக்கும் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அட இந்த சண்டை காட்சியும் இருந்து இருந்தால் நன்றாகத்தான் இருந்து இருக்குமே என ரசிகர்கள் கேட்டு அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதோடு இந்தக் காட்சி இந்தி ரீமேக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

    5 தேசிய விருது

    5 தேசிய விருது

    சில நாட்களுக்கு முன் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்து விருதுகளை 'சூரரைப் போற்று' திரைப்படம் பெற்றது. சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய ஐந்து பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor suriya’s soorarai pottru deleted fight scene video trending on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X