மாடாக மாறிய மாறா.. வெளியான டெலிடட் சீன்.. வேற லெவல் டெடிகேஷன்.. 100 நாளை தொட்ட சூரரைப் போற்று!

சென்னை: அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களை சூரரைப் போற்று திரைப்படம் கடந்துள்ளதை படக்குழு கொண்டாடி வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சூரரைப் போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றையும் 2டி நிறுவனம் தற்போது தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

#SudhaKongara என்ற ஹாஷ்டேக்கை சூரரைப் போற்று ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒடிடியில் 100 நாட்கள்

ஒடிடியில் 100 நாட்கள்

தமிழ் சினிமாவுக்கு இது நிச்சயம் புதிய அனுபவம் தான். ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள் ஓடுமா? ஓடாதா என்கிற சந்தேகங்களை தாண்டி சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 100 நாட்கள் கடந்ததை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் கொண்டாடி வருகிறது.

டிரெண்டிங்கில் சுதா கொங்கரா

டிரெண்டிங்கில் சுதா கொங்கரா

இப்படியொரு அட்டகாசமான படத்தை கொடுத்த இயக்குநர் சுதா கொங்கராவை கொண்டாடும் விதமாக #SudhaKongara என்ற ஹாஷ்டேக்கை சூரரைப் போற்று ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 2டி நிறுவனமும் சுதா கொங்கராவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

படக்குழுவினருக்கு பாராட்டு

படக்குழுவினருக்கு பாராட்டு

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், பாடலாசிரியர்கள், ஸ்டன்ட் இயக்குநர், ஒளிபதிவாளர், ஒப்பனை கலைஞர்கள் என அனைவருக்கும் தனித் தனியாக போஸ்டர்களை போட்டு 2டி நிறுவனம் தற்போது தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. இத்தனை கலைஞர்களின் ஒட்டுமொத்த உழைப்பு காரணமாகத்தான் இப்படி ஒரு படைப்பு உருவானது என ரசிகர்கள் அனைவரையும் பாராட்டி வருகின்றனர்.

டெலிடட் சீன்

ஏரோபிளேன் கம்பெனியை ஆரம்பிக்க போராடி வரும் மாறா, இடைவேளையின் போது வில்லனிடம் ஒட்டுமொத்தமாக ஏமாந்து எல்லாத்தையும் இழந்த போது எப்படி தவித்தார், அவரது வாழ்க்கை எப்படி மாறியதை என்பதை காட்ட எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக வெட்டப்பட்டன. இந்நிலையில், தற்போது, அந்த காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏன் கட் பண்ணீங்க

ஏன் கட் பண்ணீங்க

ஒடிடி தளத்தில் 10 மணி நேரத்துக்கு வெப்சீரிஸ்கள் எல்லாம் வெளியாகும் போது, இப்படியொரு சூப்பரான காட்சியை ஏன் கட் பண்ணீங்கன்னு சூர்யாவோட ரசிகர்கள் எல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். பேக்கரியில் வெயிட்டர் வேலை செய்வது, மாடுகளுக்கு பதிலாக ஏர் உழுவது என சூர்யா போட்டிருக்கும் கடும் உழைப்பை எல்லாம் கட் பண்ணிட்டீங்களே என கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள், இன்னமும் காட்சிகள் இருந்தால் போடுங்க, பார்க்க நாங்க ரெடி என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X