twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சூரரைப்போற்று“ 5 தேசிய விருதுகள்..மகிழ்ச்சியில் வார்த்தையே வரவில்லை.. நெகிழ்ந்த சுதா கொங்கரா!

    |

    சென்னை : சூரரைப்போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகளை வென்றுள்ளதை படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது.

    இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.

    தேசிய திரைப்பட விருதுகள் 2022:: தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்!தேசிய திரைப்பட விருதுகள் 2022:: தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்!

    68வது தேசிய திரைப்பட விருதுகள்

    68வது தேசிய திரைப்பட விருதுகள்

    68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் என 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியானத் தருணம் குறித்து மகிழ்ச்சியில் மூழ்கி உள்ள இயக்குநர் சுதா கொங்கரா, படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    ஜெயிச்சிட்டோம் மாறா

    ஜெயிச்சிட்டோம் மாறா

    மேலும், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா, படத்திற்கு இத்தனை விருது கிடைத்திருப்பதை பார்க்கும் போது நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தைகளே வரவில்லை என, மகிழ்ச்சியில் திளைத்துப்போனார் சுதா கொங்கரா. படத்தை எடுக்கும் போது படம் நல்லபடியாக வெளியானால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதிற்குள் இருந்தது.

    வெற்றி நிச்சயம்

    வெற்றி நிச்சயம்

    அதுவும் வாழ்க்கை வரலாற்றுப்படத்திற்கு இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை இது மகிழ்ச்சி அளிக்கிறது. அவார்டுக்காக தனியாக படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்படம் உடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் முழு திறமையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. அது மட்டும் இல்லாம், ஒரு கதாநாயகனை முன்னிறுத்திய கதையில் அபர்ணா விருதைவென்றது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

    எல்லை இல்லா மகிழ்ச்சி

    எல்லை இல்லா மகிழ்ச்சி

    படத்தில் 150 காட்சி வருகிறது என்றால், அதில் வெறும் 20 காட்சியில் மட்டும் தான் அபர்ணா வருவாள். ஆனால், அந்த காட்சிக்காக அபர்ணா உழைத்த உழைப்புதான் இன்று அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அதே போல சூர்யாவிடம் 100சதவீதம் நடிப்பை எதிர்பார்த்தால் அதை ஆயிரம் மடங்காக நமக்கு திருப்பி கொடுப்பார் அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி என்றார்.

    English summary
    National Film Awards (தேசிய திரைப்பட விருதுகள்) 2022: தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அதே போன்று இன்னும் 2 தமிழ் படங்களுக்கும் விருது கிடைத்துள்ளது. ஆக மொத்தம் 3 தமிழ் படங்கள் 10 அவார்டுகளை அள்ளியது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X