தனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்!
சென்னை : தனுஷ் கார்த்திக் நரேன் இணையும் தனுஷ் 43 திரைப்படத்தில் சூர்யாவின் நண்பர் இணைந்துள்ளார்.
மாஃபியாவின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நிலையில் இப்போது இந்த திரைப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு நண்பராக நடித்த கிருஷ்ணா முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜகமே தந்திரம்
அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜகமே தந்திரம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாளவிகா மோகனன் கதாநாயகியாக
தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் தனுஷ் இப்பொழுது இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் இணைந்திருக்க எதிர்பார்ப்பு எகிறுகிறது. மாஃபியாவின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என எதிர்பார்த்து உள்ள நிலையில் இப்பொழுது தனுஷுடன் கை கோர்த்திருக்கும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பூஜையுடன் தொடங்கப்பட்டது
இதுவரை பாடல் ஆசிரியராக இருந்த விவேக் முதல் முறை திரைக்கதை ஆசிரியராகவும் தனுஷ் 43 திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் மூக்குத்தி அம்மன, தடம் ஆகிய திரைப்படங்கள் நடித்த சம்ருதா இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

பெண் ரசிகைகள்
சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதில் சூர்யாவின் நண்பராக சைதன்யா என்ற கதாபாத்திரத்தில் கிருஷ்ணகுமார் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி இருப்பார் குறிப்பாக பெண் ரசிகைகள் அவருக்கு எக்கச்சக்கமாக உருவானது.

அதிகாரப்பூர்வ தகவல்
2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கிருஷ்ணகுமார் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நண்பராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்பொழுது தனுஷ் 43ல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











